பக்கம்:நற்றிணை-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நற்றிணை தெளிவுரை தலைவியின் பேச்சிலே, அவளது ஏக்கமிகுதி நன்கு வெளிப்படக் காணலாம். அவள் காதன்மையின் மிகுதியும் புலப்படும். 'முயங்கு தொறும் முயங்குதொறும் முயங்க முகந்து கொண்டு அடக்கும் மார்பின் முயக்கம் என்பர் இதனை. (பொருநர். 183.4) அதனைப் பெறுதலையன்றி அவனை வெறுத் தலை அவள் எதலுைம் எக்காலத்தும் நினையாள் என்பதாம். இறைச்சி பலியுண் காக்கையானது மழையிலே நனந்து குளிரிலே வருந்தி நலிந்திருக்கும் காலத்தினும், கழாஅர் நகரிலே கிடைக்கும் விடக்குடைப் பெரும் பலியைக் கருதியிருக்கும் என்றனள். இது, 'என்றேனும் அவர் வந்து நம்மைத் தலையளி செய்வர் என்னும் நம்பிக்கை ஒன்ருலேயே யானும் உயிர் வாழ்கின்றேன்' என்றதாம். 282. நாடுகெழு வெற்பனின் தொடர்பு! பாடியவர்: நல்லூர்ச் சிறுமேதாவியார்; நன்பாலூர்ச் சிறுமேதாவியார் எனவும் கொள்வர். திணை: குறிஞ்சி. துறை: சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. ((து.வி.)) களவொழுக்கத்தேய்ே ஒழுகிவரும் தலைவனைத் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதற்கு விரை தற்குத் துண்டக் கருதினுள் தோழி. அவன் ஒருநாள் வந்து குறியிடத்து ஒரு பக்கத்தே செவ்வி நோக்கி நிற்ப தறிந்தவள், தலைவிக்குக் கூறுவாள் போல, அவனும் கேட்டு உணருமாறு சொல்லிய பாங்கில் அமைந்த செய்யுள் இது.) தோடமை செறிப்பின் இலங்குவளை ஞெகிழக் - கோடேங் தல்குல் அவ்வரி வாட - கன்னுதல் சாய படர்மலி அருநோய் காதலன் தந்தமை அறியா துணர்த்த அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன் 5 கிளவியில் தணியின் நன்றுமன் சாரல் அகில்சுடுகானவன் உவல்சுடு கமழ்புகை ஆடுமழை மங்குலின் மறைக்கும் நாடுகெழு வெற்பைெடு அமைந்தகம் தொடர்.ே! தெளிவுரை : தோழி! தொகுதியாக அ ைம ந் த, செறித்தலைக் கொண்டவான இலங்குகின்ற வளைகளும் நெகிழ்ந்தன; :பக்கம் உயர்ந்த அல்குலினது அழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/178&oldid=774176" இலிருந்து மீள்விக்கப்பட்டது