பக்கம்:நற்றிணை-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - . (ال: دِل یا . (ری ہوا . . 13 , , , , நற்றிணை தெளிவுர்ை 202. செல்சுடர் நெடுங்கொடி! பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ. தின : துறை : உடன் போகா நின்ற தலைமகன் தலை ۰۰ هه ۰هٔ மகட்குச் சொல்லியது. . 蠶 தன் இல்லத்தைவிட்டு நீங்கித் தலைவனுட்ன் உடன்போக்கிற் செல்கின்ருள் தலைவி. அவள் வழியிடை வருத்தத்தைப் போக்குவாகைக், காட்டைக் காட்டித், தலைவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.1 புலிபொரச் சிவந்த புலவுகா றிருங்கோட்டு ஒலிபல் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து வண்சுவற் பராரை முருக்கிக் கன்ருெடு மடப்பிடி தழீஇய தடக்கை வேழம் தேன்செய் பெருங்கிளே இரிய வேங்கைப் 5 பொன்புரை கவளம் புறந்தருபு ஊட்டும் மாமலை விடரகம் கவைஇக் காண்வரக் கண்டிசின் வாழியோ குறுமகள்! நுங்தை அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கட் செல்சுடர் நெடுங்கொடி போலப் 10 பல்பூங் கோங்கம் அணிந்த காடே! தெளிவுரை : புலியோடு போரிட்டுக் கொன்றதாலே சிவப்புக்கறை படிந்ததும், புலவுநாற்றத்தை யுடையதுமான பெரிய கொம்பினிடத்தே உண்டாகிய பலவாகிய முத்துக்கள் ஒன்ருேடொன்று மோதி ஒலிசெய்ய, வன்கண் மையிலே மிகுந்ததாய், வலிய மேட்டு நிலத்திலேயுள்ள பருத்த அடியுையுடைய வேங்கை மரத்தைத் தகர்த்துத் தள்ளியது, பெரிய கையையுடையதான வேழம் ஒன்று. கன்ருேடும், இளமை நலங்கொண்ட தன் பிடியையும் அருகே கொண்டுள்ள அது, மொய்த்துத் தேனிட்டக் கருதிக் கூடியிருந்த வண்டினத்தின் பெருங்கூட்டமானது அகன்று போகுமாறு, அவ் வேங்கையின் பொன்னைப்போன்ற பூவும் தழையுங் கலந்த உணவுக் கவளத்தை, அவற்றுக்கு அன்போடு பறித்து ஊட்டியபடி யிருக்கும். பெருமலை யிடத்துள்ள, அத்தகைய பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டதாய், அழகுற இக்காடும் தோன்றுவதைக் க்ாண் பாயாக! இளையவளே, நீயும் வாழ்க! நின் தந்தைக்கு டிரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/18&oldid=774178" இலிருந்து மீள்விக்கப்பட்டது