பக்கம்:நற்றிணை-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை . 1ገግ நினக்குத் தகுதியாகுமோ? ஆதலின், நீதான் நன்குக் கருதினை யாய் ஒரு முடிவையும் செய்வாயாக ! சொற்பொருள்.ஒங்குகழி-அகன்றகழி. குறுதல்-கொய்தல். நேர்ஒத்தல்-மிக்க ஒப்புடையதாதல். அகல்வரிச் சிறுமனை. அகன்ற கையாலே கோலஞ்செய்த சிறு வீடு. வல்லோர்-அறி விலே வல்லவர்; அறிஞர். தொல்கவின்-பழையதான அழகு. முந்நீர்-கடல். ஏம்-இன்பம். சுடர்-கதிரவன். விளக்கம்: ஞாயிற்றை உவமை கூறியது, பகற்குறிக். கண்ணே அவனும் தவருது வந்து தோன்றுதலினலே. அவளே வரைந்து எய்தாயாய் இங்ங்ணம் ஒழுகி வந்ததனலே அவள் தான் பெரிதும் நலனழிந்தாள்; நின் பேச்சை நம்பிளுேரை வருந்தவிடுதல்தான் நினக்கு முறையாகுமோ என்கின்ருள். ~ 'தயங்குதிரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி! வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்:-(அகம் 263) என வாய்மைக்குக் கதிரைப் பிற சான்ருேரும் காட்டுவர். உள்ளுறை : மகளிர் கொய்து கொணர்ந்த நீலமலர்கள் சிறுமனையை அழகு செய்யும் என்றது, இவளை மணந்து கொண்டனையாய் உடன்கொண்டு சென்று, நினது இல்லத் தையும் இவளால் அணிபெறச் செய்வாயாக’ என்று கூறியதாம். இரண்டாவது துறை : தலைவனே! இவளை இங்ங்னம் வரைந்து கொள்ளாது தன் பழைய கவினழியச் செய்து நலிவித்ததுதான் நினக்குத் தகுதி தானே? என்றதாகக் கொள்க. | - ." உள்ளுறை: 'சிறுமனையை மகளிர் கழியிடைக் கொய்து வந்த நெய்தல் மலரே அழகு செய்தலைப் போல, நின் இல்லத்தை இவள்தான் அழகுசெய்தற்கு உரியவள்" என்ற தாகக் கொள்க. | குறிப்பு: இச் செய்யுளில் எட்டு அடிகளேயுள்ளன. 'சிறுமை’ எனக் கூறிய ஒன்பது அடியினுங் காட்டில் ஒரடி குறைவாகவே உள்ளது. செய்யுளின் அமைப்பு முதலிலுள்ள ஒன்றிரண்டு அடிகள் காணுமற் போயிருக்கலாமோ என்று உணர்த்துகின்றது. "ஒண்ணுதல் மகளிர் என்றது அவர்தாம் கவலையாற் பற்றப்படாத குமரிப்பருவத்தினர் என்றற்காம், வல்லோர்’ என்றது, அழகுபற்றிய சாத்திர நுட்பமறிந்த அறிஞர் என்றதுமாம், | | | |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/181&oldid=774180" இலிருந்து மீள்விக்கப்பட்டது