பக்கம்:நற்றிணை-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(84. நற்றின தெளிவுரை தெளிவுரை: வானத்தைச் சென்று தடவுமாறுபோல உயரமாக அமைந்த கோட்டைப் புறமதிலை வெம்மையாக முற்றுகை இட்டனன். பசிய கண்களைக் கொண்ட யானைப் படையை உடைய பகைவேந்தனும் மதிற்புறத்தேயே தங்கினன். அதுகாலையும், வலியமைந்த எயிலைப் பகைவர் கைப்பற்ருதபடி காத்துநிற்கும் நல்ல மதில்காவல் உடை யாரான் வீரரை யாம் பெற்றிருக்கின்றேம்’ என்று செறுக் கிக் கூறுவான், பெரிய தகைமையாளகிைய மறவர் குடித் தலைவன். அவனைப் போலவே யானும் துணிவோடிருந்தேன். வளைந்த கழியிடத்துப் பசிய இலைகளையுடைய நெய் தல்கள் மிகுந்திருக்கும், குளிர்ந்த கடற்கரைப் பகுதியாள ஞகியவன் நம் தலைவன். அவன், அச்சத்தைச் செய்கின்ற முதலைகளாகிய நடுக்கந்தரும் பகையினுக்கும் அஞ்சமாட் ட்ான். நம்பாலுள்ள காதலின் மிகுதியாலே நம்மைத் தேடியும் வந்தான். அப்படி அவன் வந்தபொழுது, கெடாத வன்கண்மை உடையதான என் நெஞ்சமும் கலங்கிற்று. நள்ளென்னும் இரவுப்போதிலே துயில் கலைந்து ஆரவாரிக் கும் புள்ளொலியைக் கேட்கும் போதெல்லாம், அதுதான் தலைவனின் தேரிற் கட்டியுள்ள மணிகளின் தெளிந்த ஓசை போலும் என மயங்கிற்று. ஊராரெல்லாம் உறங்கியிருக்கும் இந்த இரவுப்போதிலும் என் கண்கள் துயில்கொள்ளல மறந்துவிட்டன, காண்பாயாக! கருத்து: "இற்சிறை பெறினும் அவன்தான் விரைந்து வந்து நம்மை மணந்து காப்பான் என்றிருந்தேன்; அதுவும் இதுபோது இல்லாதாயிற்று' என்பதாம். சொற்பொருள்: புரிகை. கோட்டைப் புறமதில். வெம்ப முற்றி - வெம்மை தோன்ற முற்றி: இது முற்றியதன் கடுமையை உள்ளிருப்பார் உணரும் வகையில் முற்றியதாம். எயில் உடையோர் - எயில் காத்தலில் வன்மையுடை யோரான படை மறவர். பெருந்தகை மறவன் - பெருந் தகையாளகிைய மறவன்: பெருந்தகை இங்குப் பேராண்மை சுட்டியது. நாமம் - அச்சம். பெருமை - மிகுதி. அருகுதல் - கெடுதல். * . . 2. விளக்கம்: தான் காவலுட் பட்டமையை முற்றுகைப் பட்டிருந்த ஒரு கோட்டைக்கு உள்ளிருக்கும் தலைவனின் நிலையோடு உவமித்தாள். அவன் போல யானும் தலைவனின் ஆண்மையை நம்பினேன்; அவனே விரைந்து வாராதாளுய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/188&oldid=774187" இலிருந்து மீள்விக்கப்பட்டது