பக்கம்:நற்றிணை-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின தெளிவுரை - crశ நம்மை மறந்தனன்; நாம் புள்ளொலி കോ லாம் அவன் தேர்மணி ஒலிபோலும் என்று மயங்கிமயங்கி இரவுத்துயிலும் இல்லாதேம் ஆயினேம் என்பதாம். புறத்தே பகைப்படை முற்றியிருப்பவும், அகமதிலோன் 'யான் எயிலுடையோரை உடையேன்" எனக் கவலையின்றித் திரிவதுபோல, தலைவி இற்செறிக்கப்பட்டுக் கடுங்காவலுட் பட்டிருக்கவும், நெறியின்கண் முதலைகள் இருப்பவும், தலைவன் தான் தலைவியின் கற்புமாண்பையும் கர்தலீடு பாட்டையும் கருதிய செருக்கினல், இரவுக்குறியின்கண் வந்து ஒழுகுதலையே மேற்கொள்ளும் தன்மையயிைனன் என்று நொந்ததும் ஆம். இதனைக் கேட்கும் தோழி தலைவியது நிலையைத் தலைவனுக்கு உணர்த்த, அவனும் தெளிவுபெற்று வரைந்துகொள்ளலிலே விரைவான் என்பது இதன் பயனம். 288. கன்னுதல் பரந்த பசலை ! பாடியவர் : குளம்பனர். திணை: குறிஞ்சி. துறை: தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய் வெறியறிவுறீஇ வரைவுகடாயது. (து. வி.) தலைவன் வந்து சிறைப்புறமாக நிற்பதறிந் தாள் தோழி. தலைவி தலைவன் உறவினிடையே இடைப் பட்ட பிரிவினலே தலைவி.பால் பச்லை தோன்றுகின்றது; அஃதறிந்த நற்ருய் முருகு அணங்கியதென வெறியாட லுக்கு ஏற்பாடு செய்கின்ருள்; இதனைத் தலைமகட்கு உரைப் பாள்போலத் தலைமகனும் கேட்டுத் தலைவியை விரைய மணந்து கொள்ளலைக் கருதுமாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) அருவியார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு ஞாங்கர் இளவெயி லுணிஇய வோங்குகிளைப் பீலி மஞ்ஞை பெடையோ டாடுங் குன்ற நாடன் பிரிவிற் சென்று நன்னுதல் பரந்த பசலைகண் டன்னை 5 செம்முது பெண்டிரொடு கெல்முன் கிறீஇக் கட்டிற் கேட்கு மாயின், வெற்பில் ஏனற் செந்தினைப் பாவார் கொழுங்குரல் சிறுகிளி கடிகஞ் சென்றும்இந் கெடுவேள் அணங்கிற் றென்னுங்கொ லதுவே? 10 நற்.-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/189&oldid=774188" இலிருந்து மீள்விக்கப்பட்டது