பக்கம்:நற்றிணை-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 A اهمی நற்றிணை தெளிவுரை ტ\ o భ 189 தூண்டுவதுபோல் அமைந்த செய்யுள் இது. (1). பரத் தைமை கொண்டிருந்த தலைவன், தன் தலைவியை மீளவும் நாடிவர விரும்பினய்ைப் பாணனை முதற்கண் வாயிலாக அனுப்புகின்ருன். அவன் கேட்கத் தலைவியின் தோழி தலைவிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுளும் இது.) வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்ரு தின்ற மிச்சில் ஓய்கட்ை முதுபகடு ஆரும் ஊரன் தொடர்பு வெஃகினை யாயின் என்சொல் கொள்ளல் மாதோ முள்ளெயிற் ருேயே 5 நீயே பெருகலத் தகையே அவனே கெடுப்ே பொய்கை நடுநாள் எய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிய மகனென் ேைர. தெளிவுரை : முள்ளைப் போன்றவான பற்களை உடை யாய்! வயலிடத்தேயுள்ள வெள்ளிய ஆம்பற் பூவானது களத்துக் கதிர்ச்சூட்டிடத்தே மலர்ந்திருக்கும். அண்மையிற் கன்றின்ற பசுவானது அப்பூக்களைத் தின்னும். அது தின்ற தன் பின்னுள்ள எஞ்சியதை ஒய்ந்த நடையையுடைய பகடு மிகுதியாகத் தின்னும். அத்தகைய ஊருடையான் தலைவன். அவன் தொடர்பினை நீயும் விரும்பினையானல் என் சொற் களையும் நின் மனத்திற் கொள்வாயாக! நீயோதான் பெரு நலங்கொண்ட தகுதிப்பாட்டினை உடையவள். அவனே வென்ருல், நெடிய நீரையுடைய பொய்கையிடத்தே நடு நாளிலே சென்றடைந்தாளுய்த், தண்ணிதாக மணம் கமழ் கின்ற புதுப்பூக்களை ஊதித் தேனுண்ணுகின்ற வண்டா வான் என்றே அவனையறிந்தோர் சொல்வார்கள். அல்லாமல், அவனை ஆண்மகன் என்று எவரும் கூருர். ஆதலின், அவனைப் புலத்தலாற் பயன் யாது கொல்லோ? கருத்து: "அவனியல்பு பரத்தைமை விரும்பலே என்று கொண்டு அதற்காக அவன்பால் ஊடாதே என்பதாம். சொற்பொருள்: ஆம்பல்-நீர்வளமிகுதியைக் காட்டுவது. சூடு-நெற்சூடு, கதிர்க்க்ட்டுகள் அடுக்கி வைக்கும்போது சூடு, மிகவுண்டாவதானால் 'சூடு என்றனர். புதுப்பூ-அன்று மலர்ந்த பூ, மிச்சில்-எஞ்சிய பூக்கள். ஒய்விடுநடைகாலோய்ந்து விட்டுவிட்டு நடக்கும் நடை; இது முதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/193&oldid=774193" இலிருந்து மீள்விக்கப்பட்டது