பக்கம்:நற்றிணை-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நற்றி&ண தெளிவுரை பகட்டின் நடை. ஓய்தல் தளர்வால் உண்டாவது. முள் எயிறு . முட்போலும் கூர் எயிறு. நலத்தகை - நலம்ாம் தகைமை, நலம் அழகும் எழிலும், விளக்கம்: நள்ளிரவிலே சேரிபுகுந்து புதுப்புதுப் பரத் தையரை நாடித் திரிபவன் என்பதல்ை, நடுயாமத்தே மலரும் ஆம்பற் பூவையுண்ணும் வண்டென்று கூறினள். உள்ளுறை : புனிற்ரு தின்று கழித்த மிச்சிலை முது பகடானது சென்று மிகுதியாகத் தின்ருற்போல, நின்னல் இளமைச் செவ்வியெல்லாம் உண்டு கழிக்கப் பெற்ருளுகிய தலைவனைப் பிற பெண்டிரும் நுகர்வாராயினர்; அதுதான் நினக்கு ஏதும் இழுக்கம் தருவதன்று என்பதாம். இரண்டாவது துறைக்கு ஏற்பக் கொள்வதாயின், முள் எயிற்ருேய்! நீதான் தலைவனது தொடர்பை விரும்பினை யானல், என் சொல்லை ஏற்றுக் கொள்ளலும் வேண்டா. நீதான் மிக்கழகு உடையவளாயிருந்தும் நின்னைப் பிரியாது உடனிருந்து வாழும் ஆண்மகன் அவன் அல்லன்; புதுப்புது மலரை நாடிச்சென்று நுகர்ந்து கழிக்கும் வண்டுபோல் பவன் அவன் என்பர் உலகோர். இதனை நீயும் கருதுவாயாக' என்பதாம். 'சூடுதரு புதுப்பூ" என்பதனைச் சூடுதற்காகக் கொய்யப் படும் புதுப்பூ எனினும் பொருந்தும். இதனைக் கொய்து சூடுவது மரபு. அவர் சூடியபின் கழித்துப் போட்ட மிச்சிலைப் புனிற்ருவும் ஒய்பகடும் பின்னர்த் தின்பவாயின என்க. மேற்கோள்: "தாய்போற் கழறித் தழிஇக் கோடல்’ என்னும் சூத்திரவுரையில் இப் பாட்டை இளம்பூரணனர் காட்டுவர். "புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்’ என்பதன். உரையில் இச் செய்யுளைக் காட்டி, இதனுள், "நீ இளமைச் செவ்வி எல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர், உழுதுவிடு பகடு எச்சிலை அயின்ருற்போலப், பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்று எனவும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ, அவள் அவைேடு கட்டில்வரை எய்தியிருக்கின்ருள் என்று ஊரார் கூறுகின்ற சொல்லை, என்னைப்போல வேறு பட் டு க் கொள்ளாதே கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாது எனவும், அவனை வண்டு என்பதன்றி மகன் என்னர் ஆதலின், அவன் கடப்பாட்டாண்மை அது என்றும் Aறிள்ை" என்றும், "என் சொற் கொள்ளன் மாதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/194&oldid=774194" இலிருந்து மீள்விக்கப்பட்டது