பக்கம்:நற்றிணை-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* f நற்றிணை தெளிவுரை ow_i என்பதற்கு, "என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ, விருப்பமாகில் யா ன் கூறுகின்றதனைக் கொள்க என்றும் நச்சினர்க்கினியர் கூறுவர். (தொல், பொருள், 171,151) 291. அழிந்த இவள் கலனே ! பாடியவர் : கபிலர். திணை: நெய்தல். துறை : வாயி லாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பறிந்து நெருங்கிச் சொல்லியது. (து.வி.) பரத்தையிற் பிரிந்து மீண்டுவரக் கருதும் தலைவனின் ஏவலகிைய பாணனிடத்துத் தல்ைவியும் அவனை ஏற்கும் குறிப்பினளாதலை நுட்பமாகப் புலப்படுத்து கின்ருள் தோழி.) - - நீர்பெயர்ந்து மாறிய செறிசேற்று அள்ளல் கெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு குப்பை வெண்மணல் ஏறி அரைசர் ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் தண்பெரும் பெளவர்ேத் துறைவற்கு நீயும் 5 கண்டாங்கு உரையாய், கொண்மோ, பாண! மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்ந்து எல்லித் தரீஇயஇனகிரைப் பல்லான் கிழவரின் அழிந்தவிவள் நலனே ? தெளிவுரை : பாணனே! நீரானது வற்றிப் போனத ேைல தன்னுடைய தன்மை மாறுபட்டதான, செறிவு கொண்ட அள்ளற் சேற்றிடத்தேயுள்ள, நெய்ப்பசை கொண்ட கொழுத்த மீன்களைப் பற்றித்தின்ன நினைத்தன நாரையினம். குவிந்து கிடக்கும் மணல் மேட்டிலே ஏறி யிருந்தபடி, அரசரின் ஒள்ளிய காலாட்படைத் தொகுதியின் தோற்றம்போல அவை தோன்றும். அத்தகைய குளிர்ந்த பெரிய கடல்நீர்த் துறைக்குரியவன் தலைவன். அவனுக்கு நீதான் கண்டது கண்டபடியே சென்று சொல்வாயாக. மிகப் பெரியவகிைய முள்ளுர் மன்னன் மலையமான் திருமுடிக் காரி, தன் காரிக்குதிரையைச் செலுத்திச் சென்று, இராப் பொழுதிலே கொண்டுதந்த பகையரசரின் ஆநிரைகளுக்கு உரியோரான, பலவாகிய பசுக்கூட்டங்களுக்கும் உரியவரின் செல்வமெல்லாம், அந்த இரவுக்குள்ளாகவே அழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/195&oldid=774195" இலிருந்து மீள்விக்கப்பட்டது