பக்கம்:நற்றிணை-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

% - (92 !}) ،مبين நற்றிணை தெளிவுரை போயிற்ை போலவே, سباهليلهه நலனும் அவனைப் பிரிந் ததேைல முற்றவும் அழிந்துபோயின.தனையும் காண்பாயாக! இதுதான் அவர் குணமாமோ? கருத்து: "அவன் செயலாலே இவளடைந்த நலக் கேட்ட்ை நீதான் கண்டது கண்டபடியே சென்று அவன் பாற் சொல்லுக’ என்பதாம். சொற்பொருள்: நீர் பெய்ர்ந்து - நீர் வற்றிப் போய். மாறிய.தன் தன்மை மாறுபட்டுப் போகிய, செறிசேற்று அள்ளல்-செறிவான சேற்றைக்கொண்ட அள்ளல். அள்ளல்சேற்றுப்பகுதி. நெய்த்தலைக் கொழு மீன் - கொழுப்புச் சத்துடைய கொழுத்த மீன். இனக்குருகு - குருகினம். முள்ளுர்-முள்ளுர்க் கானம்; மலையமானுக்கு உரியது. 'மா' என்றது, அவனது காரிக் குதிரையை. உள்ளுறை மீனருந்துஞ் செவ்விநோக்கிக் குருகினம் வரிசையாக மணல்மேட்டில் இருத்தலைப்போலத் தலைமக னிடமிருந்து பெறுதற்கான பொருட்பயனை எதிர்பார்த்து விறலி முதலாயினவரோடு பாணனும் கூடியிருக்கின்ருன் என்றதாம். குருகினம் படையணிபோலத் தோற்றினும் படையாகாமைபோல, விறலி முதலாயினவரும் தலைவ னுக்குத் துணையாவார்போலக் காட்டினும், உண்மையில் உறுதுணையாகும் பண்பினராகார் என்பதாம். விளக்கம்: 'செவ்வேல் மலையன் முள்ளுர்க் கானம்' (குறுந் 312) என்பது, முள்ளுர்க்குரியவன் மலையமானதலை உணர்த்தும். பல்லான் கிழவராயிருந்தாரும் மலையமானின் செயலால் அந்தப் பொழுதிலேயே அனைத்துமிழந்து வறிய ராயினர். அதுபோலவே, இவளும் அவன் செயலால் தன் அழகனத்தையும் இழந்தாளாயினள். இவளது நிலையைக் கண்டது கண்டபடியே அவனுக்கும் கூறுக என்பதாம். 292. யாணர் வைப்பின் கானம் ! பாடியவர்: நல்வ்ேட்டனர். திணை: குறிஞ்சி. துறை : இரவுக்குறி மறுத்தது. ((து.வி.) இரவுக்குறி வந்து ஒழுகுதலிலேயே மனஞ் செலுத்தியவகை இருக்கும் தலைவனிடத்தே, தலைவிய்ை மணம் செய்து கொள்ளும் எண்ணத்தைத் தூண்டக் கருது கின்ருளான தோழி, இவ்வாறு சொல்லுகின்ருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/196&oldid=774196" இலிருந்து மீள்விக்கப்பட்டது