பக்கம்:நற்றிணை-2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 193 நெடுங்கன் ஆரத்து அலங்குசினே வலந்த பசுங்கேழ் இலைய கறுங்கொடித் தமாலம் தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும் யாணர் வைப்பின் கானம் என்னுய் களிறுபொரக் கரைந்த கயவாய்க் குண்டுகரை - 5 ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னும் கருங்கற் கான்யாற் றருஞ்சுழி வழங்கும் கராஅம் பேளுய் இரவரின் வாழேன் ஐய மைகூர் பணியே! தெளிவுரை: ஐயனே! நெடிய கணுக்கள் கொண்ட சந்தன் மரத்தின் அசையும் கிளைகளிலே, பசுமைநிறம் அமைந்த இலையைக் கொண்ட நறுங்கொடியினதா ன தமாலம் சுற்றிப் படர்ந்திருக்கும். அத் தமாலத்தினை, காட்டிடத்தே இனிய தேன் எடுக்கும் குறவர்கள் வளைத்து அறுத்துக் கொண்டு போவர். அப்படிப் போகின்ற புது வருவாய் மிகுந்த இடத்தையுடைய கானம் என்றும் கருத மாட்டாய்! களிறுகள் தம்முட் பொருதலாலே இடிந்து கரைந்த பெரிய பள்ளங்கள் பொருந்திய ஆழமான பள்ளங் களிலே, ஒளிவிளங்கும் வெள்ளைப் பளிங் கு க் கற்க ளோடு செம்பொன்னும் கிடந்து மின்னிக் கொண்டிருக்கும் கருங்கற்களிடையே ஒடும் காட்டாற்றது அருஞ்சுழியிட்ந் தோறும் முதலைகள் இயங்கியபடியிருக்கும் இவ்ற்றையும் கருதாயாய், இரவு நேரத்திலே நீயும் வருவாய். இருள் நிரம்பிய பனிக்காலத்து இரவிலே நீ இப்படி வருவதைத் தொடரின், யானும் உயிர் வாழ்ந்திரேன்! கருத்து: நினக்கு ஊறு நேருமோவென்னும் கவலையே என்னைக் கொன்று விடும்’ என்றதாம். சொற்பொருள்:ஆரம்-சந்தனம்.வலத்தல்-சுற்றிப்படர்தல் கேழ்-நிறம். தமாலம்-தமாலக்கொடி; இது நறுமணமுடை யது என்பதும் இதல்ை அறியப்படும். பரியும்-பற்றிஇழுக்கும். கயவாய் - பெரிய வாய். வான்பளிங்கு - வெண்ப்ளிங்கு. கராம்-முதலை. நெடுந்தண் ஆரம்’ எனவும் பாடம். இறைச்சி: தேனக் கொள்பவர் சந்தன மர த் து ப் படர்ந்த தமாலக் கொடியை அறுப்பர் என்றது, அவ்வாறே தலைவியின் நலனை நாடிவரும் நீயும் அவளைப் படர்ந்து வருத்தும் கவலையை ஒழிப்பாயாக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/197&oldid=774197" இலிருந்து மீள்விக்கப்பட்டது