பக்கம்:நற்றிணை-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 θ) o நற்றின தெளிவுரை - | - விளக்கம்: இன்று இவண் வந்து சேர்ந்த நீதான் இனித் திரும்புதல் வேண்டா என்பதாம். அதுதான் இயலாம்ையின் அவன் மணத்தினை விரைந்து செய்து கொள்ளுதற்கு நினைவான் என்பதுமாம். களிறு பொரக் கரைந்த கரையினைக் கொண்ட பள்ளங்களில் வெண்பளிங்கும் செம் பொன்னும் காணப்பெறும் என்றது, அவ்வாறே எதிர் பாராத நின்னது வருகையாலே தல்ைவியும் இன்பத்தை அடைந்தனள் என்பதாம். பொழுதும் களிறும் ஆற்றுச் சுழியும் அதனிடைக் கராமும் மைகூர் பணியும் கடந்து வரு தலால், அவனுக்கு யாதாகுமோ என்னும் கவலையால் அவள் துயருற்றனள் என்க. 293, இடுபலி நுவலும் மன்றம்! பாடியவர் : கயமனர். திணை பாலை. துறை: 1. தாய் மனை மருண்டு சொல்லியது; 2. அவரிடத்தாரைக் கண்டு சொல்லி யது உம் ஆம். - (து.வி.)1. தன் மகள் உடன் போக்கிலே தன் காதல் னுடனே சென்று விட்டதனலே பெரிதும் வறிதாகிப்போன மனைக்கண்ணிருந்து புலம்பும் தாயின் புலம்பலாக அமைந் தது இது. 2. தாய் தலைவனின் ஊராரைச் சார்ந்து, தன் துயர் தோன்றச் சொல்லியதாகவும் இது கொள்ளப்படும்.) மணிக்குரல் கொச்சித் தெரியல் சூடிப் பலிக்கள் ஆர்கைப் பார்முது குயவன் இடுபலி நுவலும் அகன்றல் மன்றத்து விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப் பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் 5 பெருவிதுப் புறுக மாதோ எம்மில் பொம்மல் ஒதியைத் தன்மொழிக் கொளிஇக் கொண்டுடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாயே! தெளிவுரை : பாரகத்தேயுள்ள முதுகுடியைச் சார்ந்த வன் குயவன். அவன் நீலமணிபோலத் தோன்றும் நொச்சிப் பூவின் மாலையைச் சூடிக் கொள்வான்; பலியிடப் பெற்ற கள்ளினையும் குடித்துக்கொள்வான்; அதன்பின், தெய்வத் துக்கு இடுதற்குரிய புலின்யப்பற்றியும் ஊராருக்கு எடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/198&oldid=774198" இலிருந்து மீள்விக்கப்பட்டது