பக்கம்:நற்றிணை-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்றினை தெளிவுரை 201 "காதலித்தாரைப் பிரிந்திருப்பவர்கள், பிரிவுத் துயரத் தாலே தனித்திருந்து வருந்துவதற்கு உரியதான கார்காலத்தி லேயும், வினைசெய்தலையே நினைந்திருக்கும் உள்ளத்தோடு, நம் காதலர் விரைந்து செல்வார் என்பார்கள். நாம் அவரைப் பிரிந்தேமாய்ப், பிரிவைப் பொறுத்தபடி, நம்ழை வருத்துகின்ற துயரத்தையும் தாங்கினமாய், இவ்விடத்தே இருந்தொழிதல் வேண்டும் என்றும் கூறுவர். இனி, எல்லாம் ஏதாய் முடியுமோ? கருத்து அவரே நம்_துயரத்தை எண்ணுதவராயின், இனி யாம் எதனைப்பற்றி உயிர்வாழ்வதோ? என்பதாம். சொற்பொருள் : வினை வல் யானை - போர்வினைப்பாட்டை அறிந்து அம் முறைப்படி செய்தலிலே வல்ல யானை. புகர். புள்ளி. ஒன்ட-நெற்றிப்பட்டம். புழல் - புழை, புழற்காய்க் கொன்றை-உள்ளே புழையையுடைய கொன்றைக் காய். ஏகல் உயரமான பாறை. மேதக - சிறப்பாக. அரும் பெறற் காலை' என்றது கார்காலத்தை.வினையே நினைந்த - வினை செயல் ஒன்றை மட்டுமே நினைந்த துனைதல் - விரைதல். வருந்துபடர் . வருந்துதற்குக் காரணமான துன்பம். விளக்கம் : யானை யி ன் முகத்திலேயுள்ள பொற் பட்டத்தைப் போலப் பாறைமேல் விழுந்து கிடக்கும் கொன்றை மலர்கள் தோன்றும் என்றனர். யானை முகம் உயர்ந்த பாறைக்கும், பொற்பட்டம் பொன்னிறக் கொன்றைப் பூக்களுக்கும் உவமை. புனைநலம் என்றது, பொற்பட்டம் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கியதனக் குறித்தற்கு. கொன்றை சரம்சரமாகக் கட்டித் தொங்கவிட்டாற்போலப் பூத்திருத்தலின், கோடணி கெர்டி இணர் என்றனர். பிரிந்தோர் இரங்குவதற்குரியது கார் காலம்' என்பது தெளிவு. வினையே நினைந்த உள்ளம் என்ற தல்ை, தம்மை மறந்த உள்ளம் என்பதும் சொன்னது ஆயிற்று; ஆகவே, இனி எம் உயிர் என்னகுமோ என்னும் ஏக்க்மும் புலப்படும். துணைஇ என்றது, அதுதான் விரைய்ாதாயின் ஒரு சிறிது நம் நினைவும் எழக்கூடும்; அதற்கும் ஏதுவின்றி, அதுதான் விரைந்து செலுத்துவதாயிற்று: இனி என்னுகுவமோ? என்று வருந்துகின்றனள் என்பதற்காம். பயன் தலைவியது இப் பேச்சைத் தோழி தலைவனுக்கு உணர்த்த, அவனும், தலைவியின் பிரிவாற்ருமைத் துயரைக் கருதினவகைத் தான் பிரிந்து போவதனைக் கைவிடுவான் என்பதாம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/205&oldid=774206" இலிருந்து மீள்விக்கப்பட்டது