பக்கம்:நற்றிணை-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 203 யில்ல்ை; ஆதலினலே, நின் உள்ளத்தே தோன்றும் குறிப்பானது மிகவும் பெரிதாயுள்ளது! - வண்டுகள் மொய்க்கும் மலரும் பருவத்தையுடைய பூக்களை வெறுத்ததான, சிதர்ந்த இறகுடன் கூடிய கால்களை யுடைய கோழியானது, முதிர்ந்த மிளகுக்கொடிகள் பின்னிக் கிடக்கும் இட்த்திலே சென்று உறங்கியபடி யிருக்கும் மலை நாடனனவன், மெல்ல வந்தானகி, நின் நல்ல உள்ளத்தேயும் இடம் பெற்றதனைப்பற்றி ஐயமுற்றவளாக, அன்னையும் மயக்க மடைவள். இப்போது, அவள் ஐயம் இல்லாதேயே, கடுங்குரல் எடுத்து நின்னை அழைக்கின்றனள்; காண்பாயாக! கருத்து : நின்னுடைய மயக்கத்தால் க ள வு_ற ைவ அன்னையும் அறிவாள் என்றதாம். தலைவியால் சிறு பிரிவையும் மறக்க முடியாமையின், விரைவில் அவளை மணந்து, பிரியா துறையும் இல்லறவாழ்வினை அம்ைப்பதே தலைவனின் விரைந்த செயலாக வேண்டும் என்பதுமாம். : சொற்பொருள் : வள்ளம் - கிண்ணம்; வட்டமாகக் குழிந் திருப்பது; இதேபோலக் குழிந்துள்ள சிறு தோணியும் வள்ள்ம்' எனப்படும். கிழக்கிருத்தல் - கீழே வைத்திருத்தல். ஏறிய . மிகுந்த மகிழ்தல் - கள்ளால் உளவாகும் மயக்கம். சிதர் . வண்டு. சிதர்கால்-மென்கால். கறி - மிளகுக்கொடி. யாப்பு . கட்டியதுபோலப் பின்னிக் கிடத்தல். நல்லகம் - நல்ல உள்ளம்; அது முன்னைய நிலை: இப்போது அதுவே நின் மயக்கத்திற்கும் காரணமாயிற்று என்பது குறிப்பு. மையல் - மயக்கம்: எதேைலா மகள் இவ்வாருயினுள் என்னும் பெருங் கவலையால் உண்டாவது. ஐயம் - இவள்தான் களவுறவு பெற்ருளோ என்று நினைத்தல். விளக்கம் : பாலும் உண்ணப்படாதே கீழே யுள்ளது என்றது, உணவையும் வெறுத்ததஞ்ல் உடல் மெலிவுற்றனள் என்றற்காம். சேவடி ஒதுங்காய் என்றது நடத்தற்கும் வன்மை யற்றுப் போயின என்பதாம்; மெலிவாலும், களவை மறக்க இயலாது பெருகிய பிரிவுத் துயராலும் இஃது ஆகும். குறிப்பு நனி பெரிது’ என்றது, களவு வெளிப்படின் அறத்தொடு நிற்ற் லுக்கும். தலைவ்ைேடு உடன் போதற்கும் துணிந்துள்ள் மனவுறுதியின் குறிப்பின. அன்னை மையல் உறுகுவள் என்றது, அவள் வெகுளாளாயினும், நின் நலனையே கருதுபவளாதல்லின், துயரத்தால். உண்மை காணமாட்டாதே மயங்குவாள் என்பதாம், கூவினள் கூப்பீட்டைச் செய்கின்றனள்; இது அன்னை இவர்கள் இடத்திற்குத் தொல்வாயிருப்பன்த்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/207&oldid=774208" இலிருந்து மீள்விக்கப்பட்டது