பக்கம்:நற்றிணை-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

اليا ولم 204 ళ დო· · - நற்றிணை தெளிவுரை குறிப்பதும் ஆகும். ஐயம் இல்லாதேயும் கடுங்கூவினளான அன்னை, ஐயமுற்றனளாயின் இற்செறிப்பே நிகழும்; அப்போது களவுறவும் வாயாது; இவளும் இறந்துபடுபவள் என்பதாம். உள்ளுறை : நனையை வெறுத்த கோழியானது கறிக் கொடியது யாப்பிலே துஞ்சும் என்றனள். இது மலரன்ன மெல்லியலாளான தலைவியை வெறுத்தானகத், தலைவன் தன்னுார்க்கண்ணே சென்று ஒடுங்கினன் என்று குறிப்பிட்டுக் கூறியதாகும். பயன் : தலைவியைத் தலைவன் மணக்கும் முயற்சியிலே விரைபவன் ஆவான் என்பதாம். - 298. நமக்குப் பொருந்துமோ? பாடியவர் : விற்றுாற்று வண்ணக்கன் தத்தனர். திணை : பாலை. துறை : தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி, ஆற்ருதாய நெஞ்சினை நெருங்கிச் சொல்லித், தலைமகன் செலவழுங்கியது. - ((துவி) பொருள் தேடி வருக என்ருள் தோழி. மனமும் பொருள்பாற் செல்லுகின்றது. தலைம்கன், தல்ைவி பாற் செல்லும் தன் நெஞ்சினை நினைக்கின்ருன். அவளைப் பிரியவும் துணியமுடியாமல், பொருள் ஆசையையும் விட முடியாமல் மனம் கலங்கி, முடிவில், பொருள்தேடப் போதலைப் தள்ளி வைக்கின்றன். அவன் மனக்கலக்கமாக அமைந்த செய்யுள் இது.) வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச் செங்கண தொடுத்த செயிர்நோக்கு ஆடவர் மடிவாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட எருமைச் சேவல் கிளைவயிறு பெயரும் அருஞ்சுரக் கவலை யஞ்சுவரு கனந்தலைப் 5 பெரும்பல் குன்றம் உள்ளியும் மற்றிவள் கரும்புடைப் பணத்தோள் நோக்கியும் ஒருதிறம் பற்ருய்-வாழிஎம் நெஞ்சே-நற்ருர்ப் பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண் ஒருமை செப்பிய அருமை வாண்முகை 10 இரும்போது கமழுங் கூந்தல் பெருமலை தழீஇயும் நோக் கியையுமோ மற்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/208&oldid=774209" இலிருந்து மீள்விக்கப்பட்டது