பக்கம்:நற்றிணை-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 207 தெளிவுரை : அச்சத்தைச் செய்கின்ற யானையானது, நல்ல உடையை அணிந்து கொண்டாற்போல, நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த பெரிய தாழைப் புதர்கள் தோன்றும் அவை, கடுமை யான மேல்காற்று ம்ோதுத்லினலே, நுண்மையான பூந்தாது களை உதிர்க்கும். விளங்கும் இழையணிந்த மகளிரது வளையல் களைப்போல அவை உதிரும். வில்லால் எறியப்படும் பஞ்சி சிதறு தலைப்போல, அடுத்தடுத்து வரும் அலைகளைக் காற்றுப் பொருதி அலைத்தலால் சிதறும் நீர்த்திவலைகள் பொங்கி எழுகின்ற, பெரிய கடல்நிலத் தல்ைவைேடு கூடி மகிழ்வதற்கு முன்பே, அத்தகைய அழகிய நம் சீறுார்க்கண்ணே, நாம் தனிமையுற்று வருந்தியவிடத்தில், நாம் அலர் கூறப்படுதலை இல்லாதவராய் இருந்ததனையும், நன்கு அறிவோம் அல்லமோ? கருத்து அவரைப் பிரிந்து இனியும் ஆற்றியிருக்க நம்மால் இயலுமோ? என்பதாம். சொற்பொருள் : உருகெழு யானை - அச்சம் விளைக்கும் யானை. உடைகொண்டு - முதுகில் ஆடை போர்த்துக்கொண்டு, பிணி - பிணிப்பு: கட்டு. இருங்கோடை - கடுமையான மேல் காற்று. நுண்தாது - தாழைப் பூவின் மகரந்தம், வயங்கிழை ஒளி விளங்கும் ஆபரணங்கள். தாழைப் பூவின் அடிப்பகுதி மகளிர் அணியும் வளைபோல்வதாகலின், வளையின் தாஅம் என்றனர். விளக்கம் : சிறைப்புறத்தாளுகிய தலைமகன் கேட்டுணரக் கூறுகின்றனளாதலின், அவனுக்கு ஊரலரையும் தம் பிரிவாற் ருமையும் இவ்வாறு உரைக்கின்றனள் என்று கொள்க. காற்று மோதுதலாலே உதிரும் தாழைப் பூந்தாது, மகளிர் வளை கழன்று வீழ்வதுபோலும் என்றது, தலைவனின் பிரிவால் தலைவி யும் உடல் மெலிவுற்று வருந்துகின்றவளாயினள் என்று உணர்த்துவதாம், காற்று மோதுதலாலே அலைகள் உடைந்து பிசிர் பிசிராகச் சிதறுதலைப்போல, வேட்கை நோய் வருத்துத லாலே உண்டான உடல் மாறுபாடு பற்றிய அலரும் எழுந்து ஊர் முழுதும் பரவிவிட்டது என்பதாம். சேர்ப்பன்' - கடல் நிலத் தலைவன். - - 300. முன்கடை கிlஇச் சென்றனன்! பாடியவர்: பரணர். திண : மருதம். துறை : (1) வாயில் மறுத்தது; (2) வரைவு கடாயது உம் ஆம் (மாற்ருேர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/211&oldid=774213" இலிருந்து மீள்விக்கப்பட்டது