பக்கம்:நற்றிணை-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 209 ஊனுரிடத்தேயுள்ள. பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல, எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் ஒலையைத் தொட்டபடியே நிற்கின்றனயே! இதுதான் எதற்காகவோ? கருத்து : நின் கருத்தினை யாம் ஏற்கமாட்ட்ோம்: நீ நிற்ப தாற் பயனின்று என்பதாம். - சொற்பொருள் : சுடர்த் தொடி - ஒளி சுடரும் தொடி. கோமகள் - கோமானின் மகள். மடத்தகை ஆயம் - மடப்புத் தகைமை கொண்டவரான ஆயமகளிர். சிறுவள்ை விலை - அவளை யடைதற்கான வரை பொருள்., முன்கடை - முற்றம். துய் - பிசிர். பெரும்புண் - பெரிய போர்ப்புண், பெரும்பூண் என்றும் பாடம். ஊணுரர் தழும்பனின் கோநகர். உள்ளுறை பொருள் : காற்று மோதுதலாலே ஆம்பல் தாமரையைத் தாழும் என்றது, தலைவனின் ஏவுதலாலே நீயும் இங்கு வந்து எம்மிடத்தே இறைஞ்சி நிற்பாயாயினை என்றதாம். பயன் : தலைவனை ஏற்காது மறுத்து உரைத்தல், இரண்டாம் துறையின் தெளிவுரை: ஊரன் ஒருவன் இவளைப் பொன் அணிதல்ை விரும்பினன். இச்சிறுவளை உடையாளுக்கு விலை இதுவென்று தனது தேரினையும் அலங்கரித்துப் பொரு ளோடு எம் முற்றத்தே நிறுத்தித், தன் முதியோரையும் சான் ருேரையும் அழைத்துவரப் போயுள்ளனன். நீயும் அவ்வாறே வந்து பரிசப்பொருளைத் தந்து மணந்து செல்வதற்கு முற்படா மல், தழும்பனது ஊணுாரிடத்தே களிறு நிற்பதுபோல, அட்டிற் சாலைக் கூரையைத் தொட்டபடியே இரவெல்லாம் நிற்கின்றன: யாது பயன்? இப்படியே நிற்பாயாக என்றதாம். இதன் பயன். தலைவனின் உள்ளம் மணந்து. கோடலிற் செல்லும் என்பதாம். 301. யாய் மறப்பறியா மடந்தை! பாடியவர் : பாண்டியன் மாறன் வழுதி. திணை : சேட் படுத்துப் பிரிவின்கண், இயற்கையில் தங்குவதோர் ஆற்ருமை யினுள் என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது. r ((து - வி.) தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்த எண்ணுகின்ருள் தோழி. அவள் மனம் தலைவியின் தாய் அவள்மேல் செலுத்தும் பெரிதான அன்பையும் நினைக்கின்றது. அவள் தன்னுள்ளே சொல்லிக் கொள்வதுபோல அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/213&oldid=774215" இலிருந்து மீள்விக்கப்பட்டது