பக்கம்:நற்றிணை-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 நற்றின தெளிவுரை செய்யுள் இது. எனினும், இதனைக் கேட்கும் தலைவனும், தலைவியின் அருமையை அறிந்து, அவளை விரைவில் மணந்து இல்லறவாழ்வில் இனிது வாழ்வதுபற்றிய நினைப்பினவைான் என்பதும் ஆம்.) நீள்மலக் கலித்த பெருங்கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனிப் பெருஞ்சுனை மலர்பிணைத் தன்ன மாவிதழ் மழைக்கண் மயிலோ ரன்ன சாயல் செந்தார்க் கிளியோ ரன்ன கிளவி பணத்தோள் 5 பாவை யன்ன வனப்பினள் இவளெனக் காமர் நெஞ்சமொடு பல பாராட்டி யாய்மறப் பறியா மடந்தை தேமறப் பறியாக் கமழ்கூக் தலளே. தெளிவுரை : 'நெடுமலைத் தொடரிடையே முளைத்த பெருத்த தண்டுடைய குறிஞ்சியது, அற்றை நாட்காலையில் பூத்திருக்கும் புதுமலரைப் போன்ற மேனியள்: பெருஞ்சுனை யிடத்துக் குவளைமலர்களுள், இரண்டை ஒருங்கு பிணைத்தாற் போல விளங்கும், கரிய இம்ைகளையுடைய குளிர்ந்த கண்களை உடையவள், மயிலோ என்னுமாறு பொருந்திய சாயலை உடையவள்; சிவந்த கழுத்திாரத்தைக் கொண்ட கிளியோ என்னுமாறு பேசும் மழலைப் பேச்சினள்; பணத்த தோளினள்: கொல்லிப் பாவை போலும் வனப்பினள்-இவளாகிய என் மகள்' என்று, விருப்பமுடைய நெஞ்சத்தோடு பலபடப் பாராட்டியபடி, தாயால் சிறிதுபொழுதுக்கும் மறந்திருத்தலே அறியாத மடந்தையான தலைவியானவள், நெய்மணம் மறந் தறியாத, மணம் கமழும் கூந்தலையும் உடையவள் ஆவாளே! கருத்து: "தாய் அறியாமல் அவளை நின்னுடன் ஒன்று படுத்துவது இயலாத செயல்' என்பதாம். சொற்பொருள் : கலித்தல் - முளைத்தெழுதல். நீள்மலை - நெடுந்தொலைவுக்குப் பரந்து கிடக்கும் மலைத் தொடர். கிளவி - பேச்சு. பணத்தோள். பணத்ததோள்: பணத்தல் - பெருத்தல். பாவை - கொல்லிப் பாவை. விளக்கம்: குறிஞ்சி குறிஞ்சிச் செடி இது பன்னிராண் டிற்கு ஒரு முறை முளைத்துப் பூப்பது மென்மை சிறந்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/214&oldid=774216" இலிருந்து மீள்விக்கப்பட்டது