பக்கம்:நற்றிணை-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நற்றினை தெளிவுரை ஆரவாரிக்கும் தன்மைகொண்ட ஊர்: அலர் உரைப்பார் பெரிதும் மகளிர் என்று கொள்க. விளக்கம் மணங்கமழ் கானல் இயைந்த நம் கேண்மை’ எனக் கானற்சோலையிடத்தே நேர்ந்த தல்ைலுன் தலைவியரின் முதற்சந்திப்பையும் பிறவற்றையும் கூறிள்ை, தலைவன், ஊழ்கூட்டிய அந்த உறவின் சிறப்பை நினைவுகொளற்கும், அதுபோது கூறிய உறுதிமொழிகளை நினைத்தற்கும். ஒரு நாள் கழியினும் உய்வரிது என்னது" என்றது, அவன் பிரிவைப் பொருத கழிபெருங் காதலள் தலைவி என்றற்கு. தேர் வரவு கண்டு அழுங்க' என்றது, அவன் வரையக் குறித்துச்சென்ற காலத்துக் கழிவினும் வராதேபோயினமை குறித்துப் புனைந்து சொல்லியதும், ஊரலர் ஏற்பட்டதை உணர்த்தியதும் ஆம். உயவுப் புணர்ந்தன்று’ என்றது தலைவியின் மெலிவைக் குறிப்பிட்டது. தலைவியின் மெலிவு கண்ட முதுபெண்டிர் முதலியோர் வெறியாடல் முதலாயின மேற்கொள்ளலைக் குறித்துக் கூறியதும் ஆம். இதல்ை, இனிக் களவில் தலைவியை அடைதல் அரிது என்பதும், வரைந்து மணந்துகொள்ளலே தக்கதென்பதும் உணர்த்தினள். ஊர் மேல் பழியைச் சார்த்திக் கூறினாலும், தலைவியை விரைந்து மணந்து கோடலே தலைவன் இனிச் செயத்தக்கது என அவன் கடமையை உணர்த்தியதுமாம். உள்ளுறை உவமம் : தாழையின் வெண்பூத் திரைமோது தலாலே பொங்கித், தாது சொரிந்து, சிறுகுடிப் பாக்கத்தே உளதாகிய புலால் நாற்றத்தைப் போக்கும். அது போக்கு மாறு போலத், தலைவனும், களவை நீட்டித்தலால் உண்டாகும் அலரைப் போக்க முன்வந்து, தலைவியின் பெற்ருேர்க்கு வேண்டும் வரைபொருளைத் தந்து, தலைவியை வரைந்துவந்து மணந்து கொள்வதன் மூலம், ஊரலரைப் போக்குதல் வேண்டும் என்பதாம். தலைவியின் மேனி மெலிவால் அவள் இனியும் பிரிவு நீட்டிப்பின் இறந்து படுவாள் ஆதலின்,அதனைப்போக்குவதற்குக் கருதினையாயின் விரைய மணம்வேட்டு வருதலைச் செய்வாயாக என்றனள். பயன் : இதனைக் கேட்டலுறுவானகிய தலைமகன், விரைந்து வந்து மணந்து கோடலிலே, தீவிரமாகத் தன் மனத்தைச் செலுத்துவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/22&oldid=774222" இலிருந்து மீள்விக்கப்பட்டது