பக்கம்:நற்றிணை-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 நற்றிணை தெளிவுரை அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே' 10 தெளிவுரை தோழி! நீண்ட மெல்லிய தினையின் மணமுள்ள கதிர்களைக் கிளிகள் நிறையத் தின்னும். தின்று விட்டு, மலைச் சாரலிலுள்ள பாறைப் பக்கத்தேயுள்ள தன் சுற்றத்தோடும் சென்று கூடியவாய்க், காற்ருலே ஒலியெழுப்பு கின்ற கொம்பு வாத்தியத்தைப் போல, அவை ஒன்றை யொன்று கூவி அழைத்தபடியிருக்கும். நெருங்கிய பக்கமலைகளை யுடைய, அத்தகைய நல்ல மலைநாட்டவன் நம் தலைவன்! . . அவன் வந்து என்னைக் கூடினன் ஆயின், என்பால் நல்ல அழகும் உண்டாயிருக்கும். அவன் என்னைவிட்டுப் பிரிந்தான யின், நீலமணியின் இடைப்பட்ட பொன்னைப்போல, என் மேனியின் மாந்தளிர் நிறமானது அழிந்துபோகப் பசலையும் தோன்றி, என் அழகையும் நலத்தையும் கெடுக்கா நிற்கும். ஆதலினலே, தண்ணிதாக மணம் கமழும் நறிய தாரினைக் கொண்ட வல்லமையாளனை நம் தலைவனின் மார்பானது, இசையறி விலங்காகிய அசுணமாவைக் கொல்பவரது கையைப் போலவே, இன்பமும் துன்பமும் ஒருசேரப் பெரிதும் மிகுதியாக விளைவித்தலை உடைத்தாயிருப்பது காண்! கருத்து: "அவனே இன்பமும் துன்பமும் தருபவனயின் என் செய்வது?’ என்பதாம். சொற்பொருள் : வாரல் மென் தினைப் புலவுக்குரல் - நெடுமையும் மணமும் கொண்ட தினையின் ம்ென்மையான கதிர்கள்: மென்மை என்றது கதிர் முற்ருதிருக்கும் பாலேற்ற காய்ப்பருவ நிலையைக் குறித்தது; அதுதான் சில நாட்களில் முற்றுதலும், அதன்பின் தான் கிளிகடிதற்கு வாராதே இச்செறிப்புறுதலும் நிகழும் என்பதும் குறிப்பாற் கூறியதாம். கிளை - சுற்றம். வயிர் ஊதுகொம்பு விளிபயிற்றல். ஒன்றை யொன்று கூப்பிட்டுக் குரல் பயிற்றல். மணி - நீலமணி. மாமை - மாந்தளிரின் செம்மை நிறம், கருஞ்சிவப்பான வண்ணம். அசுணம் - அசுணமா என்னும் இசையறி விலங்கு; இதனைப் பற்ற நினைப்பவர், இன்னிசையை இசைத்து, அது அதில் மயங்கித் தம்மருகே வந்தவுடன், கடும் இசையான பறையினைக் கொட்ட அது அதல்ை உயிர்துறக்க, அதனைக் கொள்வர் என்று சொல்லப்படும். அசுணத்திற்கு இன்பம் நல்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/220&oldid=774223" இலிருந்து மீள்விக்கப்பட்டது