பக்கம்:நற்றிணை-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நற்றிணை தெளிவுரை 306. எக்காலத்தே வருமோ? பாடியவர்: உரோடகத்துக் கந்தரத்தனுர். தின : குறிஞ்சி, துறை (1) புன்மடிவு உர்ைத்துச் செறிப்பறிவுறுத் தியது; (2) சிறைப்புறமும் ஆம். - ((து-வி.) (1) 'தினை கொய்தற்குத் தொடங்கினர்; ஆதலின் இனிக் க்ளவு உறவும் வாய்த்தலரிது; தலைவியும் இற்செறிக்கப் படுவாள்' என்று கூறுவதன்மூலம், அவளை அவன் விரைந்து வரைந்துவந்து மணந்துகொள்ளல் வேண்டுமென வற்புறுத்து வதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகன் சிறைப்புறத் தாகைக் கூறியது என்பதும் ஆம்; அப்போதும் வரைவுவேட்டுக் கூறியதாகவே கருதுதல் வேண்டும்.) - தந்தை வித்திய மென்தினை பைபயச் சிறுகிளி கடிதல் பிறக்கியா வனதோ குளிர்படு கையள் கொடிச்சி செல்கென நல்ல வினிய கூறி மெல்லக் . கொயல்தொடங் கினரே கானவர் கொடுங்குரல் 5 குலவுப்பொறை யிறுத்த கோல்தலை இருவி விழவொழி வியன்களங் கடுப்பத் தெறுவரப் பைதல் ஒருநிலை காண வைகல் யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொல் செறிதோட் டெல்வளைக் குறுமகள் 10 சிறுபுனத் தல்கிய பெரும்புற நிலையே! தெளிவுரை : நின் தந்தை விதைத்த மெல்லிய தின்ைப் பயிரைக் காக்கும் பொருட்டாகப் பையச் சென்றனையாய், தினைக் கதிர்களைக் கவரவரும் கிளிகளை ஒப்புதலாகிய அச் செயல்தான், இனியும் எவ்வாறு வாய்க்குமோ? குளிர்" என்னும் கிளிகடி கருவியை ஏந்திய கையினளாகத் தோன்றும் கொடிச்சியே! இனி நீயும் நின் மனைக்குப் போவாயாக’ என்று, நல்ல இனிய சொற்களைக் கானவரும் கூறினர். அவர், மெல்ல்த் தினையையும் கொய்தலைத் தொடங்கினர். புனமும், வளைந்த கதிர்களாகிய சுமையைத் தாங்கிய திரண்ட தலையையுடைய தினத்தாள்கள் தனித்து நிற்பதாயிற்று. அதுதான் விழா நிகழ்ந்து கழிந்த, அகன்ற விழாக்களத்தைப் போலப் பொலி விழிந்தும் தோன்றும். வருத்தம் பொருந்திய அக் காட்சியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/224&oldid=774227" இலிருந்து மீள்விக்கப்பட்டது