பக்கம்:நற்றிணை-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_", திறனில்/க 224 *\را به ، م Aや நற்றிணை தெளிவுரை (2) இது தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி, அவன் வருத்தம் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ எனக் கூறியது என்று, நச்சினர்க்கினியரும் இச் செய்யுளைக் காட்டுவர் (தொல். பொ. 114 சூ. உரை.). 308. நெஞ்சம் வந்தன்று பாடியவர் : எயினந்தை மகன் இளங்கீரனர். தின : பாலை. துறை : நெஞ்சில்ை பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி, ஆற்ருளுய், நெஞ்சினில் சொல்லிச் செல வழுங்கியது. ((து-வி.) இல்வாழ்வுக்கு வேண்டிய பொருளைத் தேடி வருங் கடமையினைத் தலைவனின் உள்ளம் தூண்டுகிறது. காதன் மனைவியைப் பிரிந்து சென்று பொருள் தேடிவரத் துணிகின்ருன் அக் கணவன். அவன், தலைவியின் நிலை கண்டும் உள்ளம் நெகிழ்கின்ருன். தன் நெஞ்சுக்கு பிரிவால் அவள் வாடும் தன்மையைக் கூறித், தன் பயணத்தைத் தள்ளி வைக் கின்ருன். இந்தக் கருத்தோடு அமைந்த செய்யுள் இது.) r செலவிரை வுற்ற அரவம் போற்றி மலரேர் உண்கண் பனிவர ஆயிழை யாம்தற் கரையவும் நாணின வருவோள் வேண்டா மையின் மென்மெல வந்து வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி 5 வெறிகமழ் துறுமுடி தயங்க கல்வினைப் பொறியழி பாவையின் கலங்கி நெடிதுகினந்து ஆகம் அடைதந் தோளே, அது கண்டு ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப்பெயற்கேற் ருங்கு, எம் 10 பொருள்மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்றே! தெளிவுரை : யாம் பொருள் கருதிச் செல்லுதற்குரிய வற்றை விரைந்து செய்துவருதலைப் பற்றிய எம் சொல்லையும், அது கேட்பது தன் கடமையெனக் கொண்டு விரும்பிக் கேட் டனள். ஆயினும், குவளை மலரைப்போலும் மையுண்ட அவள் கண்களிலிருந்தும் அப்போது கண்ணிரும் வழிந்தது. ஆராய்ந் தணிந்த கலன்களையுடையாளான அவளும், யாம் அதனையறிந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/228&oldid=774231" இலிருந்து மீள்விக்கப்பட்டது