பக்கம்:நற்றிணை-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w நற்றிணை தெளிவுரை 225 தேமாய், அவளை எம்மருகே வருமாறு கூப்பிடவும், அவள் தன் செயலுக்கு நாணினளாக மெல்ல வருவாளாயினுள். என் பிரிவை அவள் உள்ளத்து விரும்பாம்ையினலேயே, மெல்ல. மெல்ல அடிவைத்து வந்தனள். யாதும் என்பால் வினவுதலும் அன்றி, யாதுங் கூறி என் செலவைத் தடுத்தலும் செய்யாள் ஆயினள். மணங் கமழும் தன் கூந்தல் முடியானது அசையு மாறு, விசையானது கெட்டமையாலே செயலற்றுப்டோன நல்ல வேலைப்பாடமைந்த ஒர் எந்திரப் பாவையேபோலத் தன் நிலை கலங்கியவளும் ஆயினுள். நெடும்பொழுதுக்கு எதையோ நினைந்தாளர்ய்ப் பித்துற்று நின்றவள், சேர்ந்து என் மார்பின் மேல் மயங்கியும் விழுந்தனள். அவளது அந் நிலையைக் கண்டேம். ஈரமண்ணுல்ே செய்யப்பட்டு நீர் கசிந்துகொண் டிருந்த பசுமண் கலமானது, பெருமழைப் பெயலிலே கொண்டு வைத்தபோது முற்றவும் கரைந்து அழிந்து போயிற்ைபோலே, பொருளின் பொருட்டு அவளைப் பிரியக்க்ருதிய என்நெஞ்சமும் அதன்பாற் செல்லாது கரைந்து, அவளோடேயே ஒன்றிக் கலந்து விட்டது; இனிப் பிரிந்து போவதென்பதுதான் யாங் ங்ணம் கைகூடுமோ? கருத்து : பிரிவு' என்னும் சொல்லைக் கேட்டதும் அவளது உள்ளத்தில் பொங்கிப் பெருகிய கலக்கமிகுதியைக் கண்டேன். ஆதலின், 'அவளைப் பிரிய்ாதிருத்தலே இதுகாலை செய்யத் தக்கது எனப் பயணத்தை நிறுத்திக்கொண்டேன்' என்பதாம். சொற்பொருள் : விரைவுற்ற விரைந்து அதற்காவன செய்த அரவம் - பேச்சரவம்; இது.பிற்ரிட்ம் பேசக் கேட்ட சொற்களும் ஆகும். பனி - கண்ணீர்த் துளிகள். கரையவும் . கூப்பிடவும். வேண்டாமை - விரும்பாமை, தகைத்தல் - தடுத் தல். வெறி - மணம். துறுமுடி - கூந்தலை முடித்துக் கொண்டை யிட்டிருத்தல்; அந்தக் கொண்ட்ையைக் குறிக்கும். பொறி . சை. அடைதல் - அடைக்கலமாகக் கொள்ளல்; சாய்ந்து விழ்தல். பசுங்கலம் சுடாத பச்சை மண்கலம். பெருமழைப் பெயல் - பெருமழையின் ப்ெயல்; பெருமேகத்தின் பெயலும் ஆம். விளக்கம் : பொறியழி பாவையிற் கலங்கித் தன் ஆகம் ஆடைந்தவள்’ எனத் தலைவியது அன்பின் பெருக்கத்தை உணர்த் தினர். பொருள்ம்லி நெஞ்ச்ம் புணர்ந்து வந்தன்று' என்றது, அன்பிற் கனிந்த இவளை அடைந்திருப்பன்த்க் காட்டினும், பொருள் அத்துண்ைச் சிறந்ததன்றெனத் தன் நெஞ்சமே நெகிழ்ந்து ஒன்றுபட்டதென்த் தன் ஆர்வமிகுதியையும் கூறினதாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/229&oldid=774232" இலிருந்து மீள்விக்கப்பட்டது