பக்கம்:நற்றிணை-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- --- あ びご* ు 部 நற்றிணை தெளிவுரை هافعكفتههكـ r - - | 204. விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே! பாடியவர் : அம்மள்ளனர். திணை: ...... துறை: பின்னின்று தலைமகன் ஆற்ருளுய்த் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. ((து. வி.) தோழியின் உதவியாலே தலைவியை அடைய நினைக்கும் தலைவன், அவள்பால் சென்று இரந்து வேண்டு கின்ருன். அவள் உதவுதற்கு மறுத்துவிடவே, அவன் தலைவிக்கும் தனக்குமுள்ள பிரித்தற்கு இயலாத உறவைத் தன் .ெ ந ஞ் சோ டு உரைத்துக்கொள்வானே போலத் தோழியும் கேட்குமாறு உரைத்துத் தோழிக்கும் தெளிவு படுத்துகின்ருன். இவ்வாறமைந்த செய்யுள் இது.) தளிர்சேர் தண்தழை தைஇ நுந்தை குளிர்கொள் வியன்புனத் தெற்பட வருகோ குறுஞ்சுனைக் குவளை அடைச்சிநாம் புணரிய நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ இன்சொல் மேவலின் இயலுமென் நெஞ்சுணக் 5 கூறினி மடங்தைகின் கூரெயிறுண்கென யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து தான்செய் குறிவயின் இனிய கூறி ஏறுபிரி மடப்பினை கடுப்ப வேறுபட் டுறுகழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி 10 விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே! தெளிவுரை : "தளிர்சேர்ந்த தண்மையான தழை யுடையை உடுத்து, குளிரென்னும் கிளிகடி கருவியைக் கையிற்கொண்டு, நீதான் காவல் புரியும் நின் தந்தையுடைய அகன்ற தினைப்புனத்திடத்தே, ஞாயிறு தோன்றி விளங்கும் காலைப்போதிலேயே யான் வரவோ? அல்லது, குறுகிய சுனேயிடத்தே கொய்த குவளைப்பூவை அணிந்து, நாம் தலைப் புணர்ச்சி பெற்ற நறிய தண்ணிய மலைச்சாரலிடத்தே ஆடிக் களித்தற்கு வரவோ? நின் இனிய சொல்லினை விரும்பித் துடிக்கும் என் நெஞ்சமானது அமைதி கொள்ளுமாறு, மடந்தையே! நின் கூர்மையான பற்களிடத்தே ஊறுகின்ற வாயூறலைப் பருகுவேன்” என்று யான் தனக்கு உரைத்தேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/23&oldid=774233" இலிருந்து மீள்விக்கப்பட்டது