பக்கம்:நற்றிணை-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 * ...) நற்றின தெளிவுரை 'ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம், பெருமழைக் பெயற்கு ஏற்ருங்கு' என்றது சுவையான உவமை. அப் கலமானது பெருமழையில் கரைந்து நெகிழ்ந்து போவதுபோல, பொருள் ஆர்வத்தாலே செறிந்த அவன் உள்ளவன்மையும், ಗ್ಲಿ நிலை கண்டதும் நெகிழ்ந்து கட்டுவிட்டது' என்று èfᎢ©Ꭲö . - 309, யான் தேறியிருப்பேன் பாடியவர் : கபிலர். திணை : குறிஞ்சி. துறை: வரை விடை, ஆற்ருள் எனக் கவன்று, தான் ஆற்ருளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. - - ((து-வி.) தலைவன், தலைவியை நாடி வரைந்து வருவதற்கு உரியதான குறித்த காலம் நீட்டித்துக் கொண்டே போயிற்று. அதனலே, தலைவியும் பொறுக்கவியலாத் துயரத்தே பட்டவளாக உழன்றனள். இதல்ை இவள் உயிர் அழிந்தும் போவாளோ? என்று அவள் தோழி கலங்கிள்ை. தேர்ழியின் கலக்கத்தை அறிந்தாளாகிய தலைமகள், அவள் கொண்ட துயரைத் தணிக்கும் வகையாலே, தான் ஆற்றியிருக்கும் மன உறுதியுடையவள் எனத் தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் தளிர்வனப் பிழந்தவென் நிறனும் நோக்கி யான்செய் தன்றிவள் துயரென அன்பின்; ஆழல் வாழி தோழி வாழைக் கொழுமடல் அகலிலேத் தளிதலைக் கலாவும் பெருமலை நாடன் கேண்மை நமக்கே விழுமம் ஆக அறியுநர் இன்றெனக் கூறுவை மன்னே நீயே தேறுவன் மன்யான் அவருடை நட்பே. தெளிவுரை : தோழியே! நீயும் வாழ்வாயாக! தொடி நெகிழ்தலாலே என் தோள்களும் மெலிவுற்றன; உடல் வாட்டத்தாலே மேனியின் இரேகைகளும் சுருங்கிப் போயின; என் மேனியும் பண்டைய மாந்தளிரின் வனப்பை இழந்து விட்டதாய், தன் நிறமும் மாறிவிட்டது; இவற்றை எல்லாம் நீயும் நோக்குவாய்!'யான் செய்த பிழையாலேதான் இவளுக்கு

  • - . . -

. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/230&oldid=774234" இலிருந்து மீள்விக்கப்பட்டது