பக்கம்:நற்றிணை-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை 229 இந்த இருநிலைக்கும் பொருந்துமாறு அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.) விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர் வாளை பிறழும் ஊரற்கு-நாளை மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு.பெண்டே! 5 தொலைந்த காவின் உலந்த குறுமொழி உடன்பட்டோராத் தாயரோடு ஒழியுடன் சொல்லலை கொல்லோ நீயே?-வல்லைக் கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை வள்ளுயிர்த் தண்ணுமை போல 10 உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே! தெளிவுரை : "சுடர் விளக்கைப் போன்றதாகச் செவ் வொளியினைச் சுடர் விட்டபடியிருக்கும் தாமரை மலர்கள்;அவை களிற்றின் காதைப்போன்ற அதன். பசுமையான இலைகளோடு தாமும் சாய்ந்து அலைபடும்; நீர் உண்ணும் துறைக்கண்ணே நீர் முகத்தற்பொருட்டு இறங்கிய மகளிர் அதுகண்டு அஞ்சி ஒடுவர். ஆழமான நீர் மிகுந்த பொய்கையிலே இவை உண்டாகுமாறு வாளைமீன்கள் துள்ளிப் பிறண்டபடியே இருக்கும். இத்தகைய ஊருக்கு உரியவன் தலைவன். அவனுக்கு ஒவ்வொரு நாளைக்கும் புதியவளான பரத்தை ஒருத்தியைக் கொண்டு கூட்டுவதற்கு முற்பட்டுள்ள, மடமை பொருந்திய பெண்ணே! மெய்ம்மையே பேசியறியதாத நின் நாவினலே, நிலைகுலைந்த வாறு தாழ்மை உடையதாகப் பேசுகின்ற நின் குறும்பேச்சி ேைல, நினக்கு உடன்பட்டுவிட்ட அப் பரத்தையரின் தாய்மா ரோடு, நீயும் ஒரு சார் அடைந்திருந்தனையாய் விரைவாக ஆன் கன்றை உரித்து உணவாகக் கொள்ளு கின்ற பாணனின் கையிடத்ததாகியதும், பெரிதாக உயிர்த்தல்ை உடையதுமாகிய தண்ணுமையினைப் போல, உள்ளே யாது மில்லாத ஒரு மேற்போர்வை போலும் நின் சொற்களை, இன்னும் சொல்லவில்லையோ? அங்ங்னம் சொல்லி, அவரையும் நின் தொழிலுக்கு உட்படுத்தவில்லையோ?" கருத்து : தலைவனது காமத்துக்கு இசையப் பரத்தை யரைக் கூட்டித்தந்து, தான் பொருட் பயன்பெறும் விறலியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/233&oldid=774237" இலிருந்து மீள்விக்கப்பட்டது