பக்கம்:நற்றிணை-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நற்றிணை தெளிவுரை பெண்மைத் தன்மையை எள்ளி நகையாடி, அவள் பேச்சுத் தம்மிடமும் செல்லாது என்றதாம். சொற்பொருள் : விளக்கு - விளக்குச்சுடர், தாமரையின் செந்நிறத்துக்கு உவமை. சுடர்விடு - ஒளிவிடு. பாசடை - பசிய இலை. தயங்க - அலைபட. இரிதல் - அஞ்சி ஒடுதல். குண்டு நீர் - ஆழமான நீர் நிலை. தொலைந்தநா - உண்மை தொலைந்து போன நா. குறுமொழி - குறுகப் பேசும் பேச்சு. தாயர்- பரத்தை யரின் தாயர். வல்சி - உணவு. போர்வையஞ்சொல் - உள்ளி டற்று மேற்போர்வையால் மட்டுமே கேட்பதற்கு அழகிதாகத் தோன்றும் பொருளற்ற ஆரவாரச் சொல். - விளக்கம் : பேச்சிலே நகைச்சுவை பொதிந்து கிடக்கிறது. நின் தலைவனுக்குப் புதிய பெண் ஒருத்தி தேவையானல், இங்கு ஏன் நீ வரவேண்டும்? அவன் தரும் பொருளை விரும்பும் பரத்தையின் தாயரையே கண்டு பேசிச் சேர்த்து வைக்கலாமே? என்கின்றது காண்க. நின் சொல் எம்பாற் பயன்படாது' என்பதும் ஆம் இதல்ை, சொல்பவரின் வெகுளியையும் G5fr6ððT6UfTLD. - - .ベ இறைச்சிப் பொருள் : வாளைமீன், தாமரை வருந்தவும், மகளிர் அஞ்சி ஒடவும், குண்டு நீரில் துள்ளிப் பிறழும்' என்றனள். தலைவனும் யாம் வருந்தவும், காமக்கிழத்தியர் இல்லத்திலிருந்து கதறவும், நீ சேர்த்துவைத்த புதிய பரத்தை யிடம் சென்று தங்கா நிற்பான் என்றதாம். மேற்கோள் : ஆசிரியர் நச்சினர்க்கினியர், இது விறலிக்கு வாயின் மறுத்தது என்று, 'பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்' என்னும் சூத்திரத்தின் உரையுள் (தொல். பொருள் 156) இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர். பாடபேதங்கள் : மகட்கொடை பொதிந்த மறங்கெழு பெண்டே. - பயன்: தலைவனின் காமக்கிழத்தியர் இல்லுறை மனைவி போல உரிமை கொண்டாடுதலைத் தடுத்ததாகும் இது; அவர் நிலையை விளக்கியதுமாகும். 311. ஒன்றே கானலது பழி! பாடியவர் : உலோச்சனர். திணை : நெய்தல். துறை : அலர் கூறப்பட்டு ஆற்ருளாகிய தலைமகளைத் தோழி ஆற்று வித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/234&oldid=774238" இலிருந்து மீள்விக்கப்பட்டது