பக்கம்:நற்றிணை-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 231 ((து-வி.) கானற் சோலையிலே கலந்து பிரிந்த தலைவனை, மீண்டும் வரக்காணுத தலைவி அதல்ை சோர்கின்ருள். அது குறித்து ஊரிலே பழிச்சொற்கள் எழுகின்றன. அப் பழிப் பேச்சு தலைவியை மேலும் வாட்டுகின்றது. தலைவியின் வாட் ಸಕ್ಲಿ* மாற்றக் கருதிய தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது. பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி இருங்கதிர் கெல்லின் யாணர் அ.தே - வறப்பின், மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும் அழியா ரபின்நம் மூதூர் நன்றே 5 கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கிச் - சிறுவி ஞாழல் துறையுமார் இனிதே ஒன்றே தோழிங் ள்ளலது பழியே கருங்கோட்டுப் புன்ன் மலரில்தா தருந்தி இருங்களிப் பிரசம் ஊதஅவர் 10 நெடுங்தேர் இன்னெலி கேட்டலோ அரிதே! தெளிவுரை : தோழி! அழியாத மரபினை உடையது நம் பழைய ஊர். மழை பெய்தால், எங்கும் உலவுகின்ற உழை என்னும் மானினங்கள் செறியத் தோன்றப் பெற்றதாயும், பெருங் கதிர்களைக்கொண்ட நெல்லின் புதுவருவாயினை உடைய தாயும் இதுதான் விளங்கும். அம் மழைதான் பெய்யாது வறண்டுவிட்டதானுலோ, பெரிய கழியிடத்துள்ள முள்ளிச் செடிகளின் மலர்கள் உதிர்ந்து பரந்தும், சேறு எல்லாம் ஈரமற்றுக் காய்ந்தும் விளங்கும், கரிய கழிப்பாங்காகிய சேற் றிடம் எங்கணும், வெள்ளுப்பும் விளையா நிற்கும். இவையும் அன்றி, கொழுமையான மீன்களைச் சுடுகின்றதால் எழுகின்ற புகையானது நம்மூர்த் தெருவெல்லாம் எப்போதும் பெருகப் பரந்து கலந்தும் விளங்கும். முன்பு, சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களையுடைய கடல்துறையும் நமக்கு இனிதாயிருந் தது! இருந்தும், ஒன்றுமட்டும் நம் காணற்பகுதிக்குப் பழி தருவ தாகின்றது. கரிய கிளைகளையுடைய புன்னை மலரிலுள்ள தேனைப் பருகிக் களிப்பினைப் பெற்ற கருமையான வண்டுகள், நன்னிமித்த மாக எதிர்வந்து ஒலிசெய்ய, நம் காதலராகிய அவருடைய நெடிய தேரினது, செவிக்கு இனிய ஒலியைக் கேட்டல்தான் நமக்கு அரிதாகிவிட்டதே! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/235&oldid=774239" இலிருந்து மீள்விக்கப்பட்டது