பக்கம்:நற்றிணை-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f , o ' t Cy - த க. கடிார்க்கீரன் ஜியா) 232 @ స్త్ర గోళీ; நற்றிணை தெளிவுரை கருத்து இக் குறை ஒன்றுமட்டும் இன்ருயின், நம்முரும் அவர் "உறவும் நமக்குக் குறைவற்ற இன்பந்தருவனவாய் ஆகுமல்லவோ!' என்றதாம். - சொற்பொருள் : வெறுத்தல் - செறிதல். உழை -மான் வகையுள் ஒன்று. இருங்கதிர் - பெரிய நெற்கதிர்_முண்டகம் - நீர் முள்ளிச் செடி. செறு - வயல், உப்புப் பாத்தி; செறுக்கப் பட்டது செறு; செறுதல் - தகைதல். மரபு - இயல்பு. தாது - பூந்தாது; இங்கு தேனைச் சுட்டியது. களி - வண்டு. விளக்கம் : வான் பெய்யினும் வறப்பினும் வளம் குன்ரு வாழ்வினர் நெய்தல் நில மக்கள்' என்னும் உண்மையும் இதல்ை கூறப்பட்டது. இயற்கையின் மாறுபாட்டானும் வருந்துதல் இலமாகிய யாம், நம் காதலனின் வன்செயலாலே ஊரில் உண்டாகிய பழிச்சொல்லைப் பெற்று வருந்துவம் ஆபினேம் என்பதாம். சிறு வீ ஞாழல் துறையும் ஆர் இனிதே' என்றது, அதுதான் முன்னர்த் தலைவனை முதற்கண் கண்டு கூடியின்புற்ற இடமாதலால், புன்னை மலரில் தாதருந்தி இருங்களிப் பிரசம் ஊத' என்றது, அவர்கள் மீளவும் சந்திப் பதற்குக் குறித்த இடம். அங்கும் அவனைக் காணுது இவர்கள் வருந்துகின்றனர். இதனைக் கேட்கும் தலைவி தன் பெருமிதத்தை உணர்ந்தாளாய்ச் சற்று அமைதி அடைவாள் என்பதாம். 'மழை பெய்யாது போயினும் உப்பு விளையும் என்பது, மழை பெய்யினும் பெய்யாது போயினும் அழியாத வளமை யுடையது நம் ஊர் என்று உரைத்ததாம். தலைவி ஆற்றியிருப் பாள் என்பது இதன் உட்கருத்து ஆகும். - - பயன் : எல்லாமே நன்முக அமையப்பெற்ற நமக்குத் தலைவனுடன் நாம் கொண்ட உறவும் முடிவில் நல்லபடியாகவே மணநிகழ்ச்சியாக முடியும் என்று தேற்றியதாம். 312. அவள்தான் என்னுகுவளோ? பாடியவர் : கழார்க்கீரன் எயிற்றியார் திணை பாலை. துறை : பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. ((து-வி.) ஒரு தலைவனின் நெஞ்சமோ பொருள்மேற் செல்லுகின்றது. பிரியின், தலைவி பெருந்துயர்ப்படுவள் என்னும் அச்சம் அவன் பிரிவைத் தடை செய்கின்றது. இரண்டுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/236&oldid=774240" இலிருந்து மீள்விக்கப்பட்டது