பக்கம்:நற்றிணை-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 238 இரண்டு உணர்வுகளுக்கும்-இடையே ஊசலாடும் அவன், தன் நெஞ்சை விளித்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) கோகோ யானே நோம் என் நெஞ்சே பனிப்புதல் ஈங்கை அங்குழை வருடச் சிறைகுவிங் திருந்த பைதல் வெண்குருகு பார்வை வேட்டுவன் காழ்களைக் தருள மாரி கின்ற மையல் அற்சிரம் 5 அமர்ந்தனள் உழையம் ஆகவும் தானே எதிர்த்த தித்தி முற்ரு முலையள் கோடைத் திங்களும் பனிப்போள் வாடைப் பெரும்பனிக் கென்னள்கொல் எனவே. தெளிவுரை : யான் நினது.விருப்பின்படியே பொருளீட்டு தற்குச் செல்லாதிருக்கின்றேன் என்று, என்ன நொந்து கொள்ளும் என் நெஞ்சமே! மேலேறிப் படருகின்ற தேமற் புள்ளிகளை உடையவள்; முற்றுதலைப் பெருத இளைய முலைகளைக் கொண்டவள்; யான் பிரியாது உடனிருப்பேனகிய இக் கோடைக் காலத்துத் திங்களிலும், யான் பிரிவேனே எனக் கருதி மயங்கியவளாய் மிக நடுங்குபவள்-என் காதலி. அவள்தான் குளிர்ச்சியமைந்த புதரிடத்தேயுள்ள ஈங்கைச் செடியினது, அழகிய தழையானது தன் முதுகின வருடிவிடத் தன் சிறகு குவிந்திருந்தப்டியே வருத்தமுற்றிருந்த வெண்ம்ையான கொக் னைப் பார்வைப் புள்ளாக்கி, வேட்டுவன், அதன்/கால்கட்டை அவிழ்த்து விடுவதற்கு நிற்கின்ற தன்மையுடையது கார்காலம்: பகலும் இரவும் என்னும் வேறுபாடறியாது மயங்கிக் கிடத் தற்கு உரியது கூதிர்காலம்; வாடைக் காற்றிைேடு பனியும் பெரிதும் பெய்தலைக் கொண்டது முன்பனியும் பின்பணியும் ஆகிய பருவங்கள். இக் காலங்களில், என்னைப் பிரிந்து தனித் திருந்தவளாக, அவள்தான் என்ன என்ன பாடுபடுவாளோ என்று, ய்ானும் நோவா நின்றேன். என் அந்த நோயினது உண்மையின் அறியாயாய், நீயும் என்பாற் புலக்கின்றதுதான் எதேைல்ா? கருத்து : யான் பிரியின் அவள் நிலை யாதாகுமோ? எனக் கவலை அடைவேன்; ஆதலின் பிரிதல் நினைவை நீயும் கைவிடுக! என்பதாம். p.–15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/237&oldid=774241" இலிருந்து மீள்விக்கப்பட்டது