பக்கம்:நற்றிணை-2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நற்றிணை தெளிவுரை சொற்பொருள் : பனிப்புதல் - ஈரமுள்ள புதர்; பணியால் நனைந்த புதருமாம். ஈங்கை - இசங்கு என்பர்; ஒருவகை முட் செடி. அங்குழை - அழகிய குழை, குழை - தழை. வருட - மெல்ல மெல்லத் தொட்டுத் தடவ தடவியது வேட்டுவன என்றும், குருகினை என்றும் கொள்ள்ல்ாம். பைதல் - வருத்தம். ‘பைதல் வெண் குருகு' என்றது; அதன் கால்கள் கட்டப் பட்டுள்ளதல்ை, பறந்து செல்ல இயலாமையால்; சிறை குவிந் திருந்ததும் பறவாததால்தான். பார்வை - பார்வைப்புள்: கைப் பறவை என்றும் கூறுவர்; பழகிய பறவை இது; இதை விட்டுப் பிற பறவைகளைப் பிடிப்பது வேட்டுவர் வழக்கம். மையல் - மயக் கம். உழையம் - அருகிருப்போம். தித்தி - தேமற் புள்ளி; எதிர்த்த தித்தி' என்றது, அதன் மேலேறிப் படரும் தன்மையால். பனிப்போள் - நடுங்குவோள். அற்சிரம் - கூதிர்ப்பருவம். காழ் - பிணிப்பு. உள்ளுறை பொருள் : வேட்டுவல்ை பார் ைவ யாக க் களைந்து வலையுள் வைக்கப்பட்ட வெண்குருகு, ஈங்கையின் அங்குழை வருடுதலால் தன் துயரத்தைச் சற்றே மறந்து, அந்தச் சுகத்தை நினைந்து இன்புறும். அவ்வாறே, இல்லில் நம்மாலே கைவிடப்பெற்றுத் தமியளாய்த் துயருறும் தலைவி யும், தோழி தேற்றத் தன் துயரையும் மறந்தவளாய், மாரிக் காலத்தைக் கழிப்பவளாவாள் என்பதாம். விளக்கம் : கடமையும் காதலன்பும் ஒன்றையொன்று மீறிச் செயல்படத் தொடங்கும் ஒரு தலைவனின் நிலையை இச், செய்யுளிற் காணலாம். இதல்ை,அவன் போகுங்காலம் தள்ளி வைக்கப்படும் என்பதும் விளங்கும். எனினும், கடமை, வலிமை பெற விரைவிற் பொருள்தேடச் செல்வான் என்பதும் அறியப் படும். முற்ரு முலையள் என்றது, காமவின்பத்திற் பற்று விடும் அளவுக்குப் பருவத்தால் முதிராதவள் என்றும், மகப்பேறு இன்னும் பெருதவள் என்றும் உணர்த்துவதாம்; ஆகவே, அவள் துய்க்கும் பருவத்தள்; அப் பருவத்து அவளைப் பிரிவுத் துயரால் நலியச் செய்தல் கூடாது என்பதுமாம். இதற்குப் பயன், செலவு அழுங்குதல் என்று கொள்க. - பயன் : தோழியின் உரைகளைக் கேட்டும், தன் துயரம் வெளிப்பட்டுப் புறந்தோன்ற அதற்ை பழிச்சொல் எழுதலை நினைத்தும், தலைவி ஆற்றியிருப்பவள்ர்வாள் என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/238&oldid=774242" இலிருந்து மீள்விக்கப்பட்டது