பக்கம்:நற்றிணை-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை Qಫijay - . 238 313. ஒலிக்கும் ທີ່ໃສນໍ່uສ. - பாடியவர் : தங்கால் பொன்கொல்லன் வெண்நாகனர். திணை : குறிஞ்சி. துறை : தோழி சிறைப்புறமாகத் தலை மகட்குச் சொல்லுவாளாய்ப் புனம் அழிவுரைத்துச் செறிப் பறிவுறீஇயது. - . . - ((து. வி.) புனம் காவலுக்கு நின்ற விடத்திலே, தலைவி. தலைவன்ைக் கண்டு காதல்கொண்டு, அவைேடு கலந்து ஒன்று. பட்டனள். அவன், களவாகிய அவ்வுறவையே தொட்ர்ந்து நாடிவருதலையும், மணத்தைப் பற்றி விரைவு கொள்ளாமை யையும் கண்டாள் தோழி. அவள் அவனுக்கு அதை வலியுறுத்த விரும்பினள். அவன் சின்றப்புறமாக, தலைவிக்குச் சொல்வாள் போலத் தன் கருத்தை நுட்பமாக அவனும் கேட்டுணரக் கூறுகின்ருள். இவ்வாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் தகைவனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து ஒலிபல் கூந்தல் அணிபெறப் புனை இக் காண்டற் காதல் கைம்மிகக் கடிஇயாற்கு 5 யாங்கா குவள்கொல் தோழி-காந்தள் . கமழ்குல அவிழ்ந்த கயவருஞ் சாரல் கூதள கறும்பொழில் புலம்ப ஊர்வயின் மீள்குவம் போலத் தோன்றும் தோடுபுலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆன 10 கொய்பதம் கொள்ளும்காங் கூஉம் தினையே! தெளிவுரை : தோழி நாம் கூவிக் கிளிகளை வெருட்டும் தினைப்புனம் எல்லாம் கதிரைக் கொய்யும் பதத்தினைப் பெற்றுள்ளன. மேலுள்ள இலைகள் காய்ந்தவாய், மலையருவி யைப் போல ஒலிப்பனவாயும் தினைப்பயிர்கள் ஆகிவிட்டன. ஆதலினலே, காந்தளின் மணம் கமழ்கின்ற பூக்கொத்து இதழ விழ்ந்துமணத்தைப் பரப்புகின்றதும், விருப்பம்வருகின்றதுமான் மலைச் சாரலானது கூதாளி படர்ந்துவிட்டதாக ஆயிற்று. நறிய பொழிலும் நம்மையில்லாதே தனிமையாயிற்று என்று ஆகுமாறு, அதனையும் கைவிட்டு, யாமும் ஊரிடத்தே மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/239&oldid=774243" இலிருந்து மீள்விக்கப்பட்டது