பக்கம்:நற்றிணை-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நற்றிணை தெளிவுரை அமைந்த அளவு இதுதான் என்று அறிபவரும் யாரும் இலர் ஆதலினலே மாரிக் காலத்து மலர்வது சிறு செண்பகம்; அதன் ஈரிய இதழ்களையுடைய் மலரினை மாலையாகக் கட்டி, நறிய வயிர முற்றிய சந்தனத்தேய்வை பூசப்பெற்ற தம் மார்பிலே அவர் சூடிக்கொண்டனர். சிறுசிறு தேமற்புள்ளிகள் கொண்ட அழகிய நிறத்தையும், கருங்கண்களையுமுடைய, விருப்பமிகுமார்பகங்கள் அமுங்குமாறு நெஞ்சுற நம்மை இறுகத் தழுவினர்; தழுவிய படியே, இவ்விரவுப்ப்ோது இவ்வாறே இன்பமாகவே கழிவதாக" என்றும் முன்பு கூறினர். தாம் சொல்வன்மையுடையர்' ஆதலின், அவ்வாறு பிரிவையும் மறைத்து, நம்மிடம் அன்புடை யார் போலப் பொய்யும் பேசினர். அவர்தாம் நெடிது வாழ்வாராக! கருத்து : 'சூள் பொய்த்த அவர்தாம் நெடிது வாழ்வா ராக” என்று வாழ்த்துவதன்மூலம், தன் ஆற்ருமை கூறியதாம். சொற்பொருள் : ஒழிந்தும் - தவறியும்; என்றது கழிந்த இளமை மீளவும் வரப்போவதே இல்லை என்பதல்ை. வகை யளவு - வகுத்து அமைந்த கால அளவு. பித்திகம் - சிறு செண்பகம். அலரி - அலர்ந்த மலர். காழ் - வயிரம். கொம்மை - அழகு. பொறி - புள்ளி. வெம்முலை - விருப்பந்த்ரும் முலைகள்: வெம்மையுடைய முலைகளும் ஆம். ஞெமுங்க - அமுங்க. மொழி வன்ம்ை - சொல் வன்மை; பொய்யையும் மெய்யே போலப் பிறர் நம்புமாறு வலியுறுத்திக் கூறுதல். நொடிவிடு அன்ன - கை நொடித்தால் எழும் ஒலிபோல. பாவை - கள்ளியின் கிளை. புன்புரு - புல்லியபுரு: பேடையைப் பிரிந்து தனிமையுற்ற ஆண் புரு. பயிரும் - கூவியழைக்கும். என்றுழ் - கோடை வெப்பம். விளக்கம் : குறித்த காலத்து வாராது அவர்தாம் தம் சூள் உரை பொய்த்தனர். சூள் பொய்த்த அவரைத் தெய்வம் வருத்தும். அதுதான் வருத்தாதிருக்க, அவர் நெடுநாள் வாழ்க! என்கின்ருள். தன் துயரத்து எல்லையிலும், தன் காதலரின் நலன் கருதும் பெண்ணியல்பும் இதல்ை உணரப்படும். தாம் செல்லும் நெறியானது, புல்லிய புறவும் தன் பேடையை விருப்போடு அழைக்கும் தன்மையதாயிருந்தும், அதைக்கண்டு போவாரிடம் நம்மால் மீண்டுவரும் அன்பு தோன்றவில்லையே என்று நினைத்து வருந்தியதாம். நாளது இன்மையும், இளமையது அருமையும், அன்பினது அகலமும் பிறவும் - நிகழ்ந்தது கூறி நிலையலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/242&oldid=774247" இலிருந்து மீள்விக்கப்பட்டது