பக்கம்:நற்றிணை-2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நற்றிணை தெளிவுரை தெளிவுரை : நெருங்கிய, பெருந் தெய்வங்களின் பெயர் களைக் கொண்டவான யாண்டுகளும் பலவாகக் கழிந்தன. அதனல், கரையை அடுத்திருக்கும் நீர்த்துறையிலே, அலைகள் மோதி மோதித் தாக்குதலாலே மோதப்பட்டுப் பழைதாகித் தொழில் செய்வதற்கு உதவாது போயினது, முரிந்த முன்பகுதி யைக் கொண்ட் தோணி ஒன்று. அதற்கு நறுமணஞ் சேர்ந்த நல்ல புகையும் கொடாதவராக, சிறிய பூக்களையுடைய ஞாழலோடு சேர்ந்து உயரமாக வளர்ந்திருந்த புன்னை மரத்தின் கொழுமையான நிழலிலே, அதன் குடமுழவு போன்ற அடி மரத்திலே, அத்தோணியைப் பிணித்தும் வைத்தனர். நல்லபடி யாகத் தொழில்செய்து உதவிய எருதானது, தன் நடைச் சிறப்பினின்றும் நீங்கியதாயிற்று என்பதனலே, உழவர்கள், அதனைப் புல்லையுடைய தோட்டத்திலே, தொழில் செய்யாதபடி வறிதே மேயுமாறு விட்டுவிட்டனர். அத் தன்மை கொண்ட் நீர்த்துறைக்கு உரியவகிைய, எம் தலைவனே! பெருஞ் சிறப்பினதாகக் கருதினையாய், நீதான் அவளோடு மேற்கொண்ட் நட்பினிடத்தே, சின்னஞ்சிறு தவறும் வராமற் படிக்கு, நன்ருக அறிந்து நீயும் நடத்தல்வேண்டும். அதனை நீதான் அறியாதவன் ஆயில்ை, எம்மைப்போலும் நெகிழ்ந்த தோள்களும் கலங்கியழும் கண்களும் கொண்டவர்ான மகளிரின் நிலைதான் யாதாகுமோ? நின்னல் விரும்பப்பட்ட அவர் நிலைதான், மல்ர்ந்து கருவேற்றுப் பயன் தந்து வீழாது தீய்ந்து, மலர்ந்ததும் வறிதே உதிர்ந்துவிடும் மலரினைப் போன்றதாகுமே! கருத்து : “இதனை உணர்ந்தாயாய், நீதான் என்று திருந்து வையோ?" என்று மனம் வெதும்பிக் கூறியதாம். சொற்பொருள் : தெய்வத்து யாண்டு - தெய்வப் பெயர் களைக் கொண்ட யாண்டு; தெய்வம் வருடப் பெயர்கட்கு வந்தது. அம்பி - தோணி வகையுள் ஒன்று. புகைகொடுத்தல், பேய்க் குற்றத்திற்பட்டு அதற்குத் தீங்கு நேராமைப்பொருட்டு. 'நடைவளம் வாய்த்தல்' என்றது, அதுதான் குன்றியதைக் குறித்ததாம். கா - தோட்டக்கால். முரிவாய் - முரிந்துபோன வாய்ப்புறம்: வாய்ப்புறமாவது தலைப்பகுதி. புணரி - அலை. நொவ்விது - நுட்பமானது. நயந்தோர் - விரும்பிக் காதலிக்கப் பட்ட மகளிர். உள்ளுறை பொருள் : அம்பியானது மூத்து முனைமுரிந்து அலைகளால் சிதைவுற்ற காலையிற் புன்னையின் அடிமரத்தில் பிணித்துப் போடுவர் என்றது, நின்னல் விரும்பப்பட்ட மகளிர்தாம்; சிறிது முதிர்ந்து அழகு குன்றினராயின் அவரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/244&oldid=774249" இலிருந்து மீள்விக்கப்பட்டது