பக்கம்:நற்றிணை-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - நற்றிணை தெளிவுரை கிணத்தலும் கிணதிரோ வைய வன்றுகாம் பணத்தாளோமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர்நிழல் இருந்தன மாக நடுக்கஞ் செய்யாது கண்ணுவழித் தோன்றி ஒடித்துமிசை கொண்ட வோங்குமறுப்பு யானை 5 பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர் அறியிடை இட்ட அளவைக்கு வேறுணர்ந்து என்றுழ் விடரகம் சிலம்பப் - புன்தல் மடப்பிடி புலம்பிய குரலே! தெளிவுரை: ஐயனே! உடன்போக்கில் உம்முடன் வந்த அந்நாளிலே, பருத்த அடியைக் கொண்ட ஒமை மரத்தின் தாழ்ந்த கிளைகளிலுைண்டான, நிழல் என்னும் சொல்லுக்குப் பொருந்தாத புள்ளிபட்ட நிழலிடத்தே, களைப்பாறுதலின் பொருட்டாகத் தங்கியிருந்தோம் அன்ருே! அப்போது, நமக்கு எவ்வித நடுக்கத்தையும் செய்யாதாய், நாமிருந்த இடத்து வழியாகவே வந்து தோன்றிற்று, உயர்ந்த தந்தங்க யுடைய யானை ஒன்று. தழையை ஒடித்துத் தின்னுதலை மேற் கொண்டதான உயர்ந்த தந்தத்தையுடைய அந்த யானை யானது, புள்ளியையுடைய தன் நெடிய கையினைச் சுருட்டித் தூக்கியபடியே, பிறிதொன்றனை அறிகின்றதன் காரணமாக, இடையீடுபட்டுப் பிளிறியது. அது அவ்வாறு பிளிறியவுடனே, அதனை வேருகக் கருதிற்ருய், அதன் புல்லிய தலையையுடைய இளைய பிடியானையானது, வெயில் பரவிய மலைப்பிளப்பிடம் எல்லாம் எதிரொலிக்குமாறு குரலெடுத்துப் புலம்பிற்று. அதன் அத்தகு புலம்பற் குரலேயும் கேட்டிருந்தீர் அல்லவோ! அதனைக் கேட்டிருந்தீர் ஆயின், கொடிய சுரநெறியில் எம்மைப் பிரிந்து செல்லாதிருப்பீர், நும் காதலியான இவளைப் பிரியாதும் இருப்பீர் அல்லவோ! கருத்து : 'தும் பிரிவை இவள் பொறுத்து நீர் வரும் வரைக்கும் உயிர் தரியாள் என்பதாம். சொற்பொருள்: நினத்தல் பண்டு நிகழ்ந்ததன நினைவு கூர்தல். பணத்தாள்-பணத்த அடிமரம், பணத்தல்-பருத்தல்: பனைத்தாள் ஒமை என்றும் வேறுபாடம், படு சினை - தாழ்ந்த கிளை பட்டுப்போன கிளையும் ஆம். பொருந்தா - பொருத்த மல்லாத, அஃதாவது நிழல் என்று சொல்லுதற்குப் பொருந் தாத புகர் புள்ளி; புகர் நிழல் புள்ளிபட்ட நிழில்: நிழலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/250&oldid=774256" இலிருந்து மீள்விக்கப்பட்டது