பக்கம்:நற்றிணை-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഹസ് ومهرذ حلل ١م في تتك ۱ می ۹م (ه நற்றிணை தெளிவுரை,.,.., 249 சொற்பொருள் : ஒதம் - கடல்; ஒதத்தையுடையது ஒதம் ஆயிற்று. ஊதை - குளிர்ச்சியான வாடைக் காற்று. தாது - பூந்தாது. கிளர்தல் - கிளைத்தல். கானல் - கானற் சோலை. ரால் - கூகையின் பெட்டை. சதுக்கம் - நாற்சந்தி. கால் ಔ# - வெளிப்பட்டு உலவுதல். பாவை - கொல்லிப்பாவை. வனப்பு - அழகு. குறுமகள் - இளமகள். உள்ளி - நினைந்து. விளக்கம் : இரவின் அமைதியும், அச்சந்தரும் கூகைக் குழறலும், அணங்குகளின் நடமாட்டமும், அவனுடைய உள்ளத் துயரத்தை மிகுதிப்படுத்துகின்றன. பொதுவாகத் தலைவியர் இரங்கும் நிலையே கூறப்படும். அஃதன்றி,இச்செய்யுள் தலைவனும் அவ்வாறு நினைந்து இரங்குதல் உளவாதலையும் உணர்த்தும் எனினும், அவன் ஆண்மகளுதலின், அடுத்து, அவளை வரைந்துசென்று மணந்து கொள்ளுதற்கான முயற்சி களிலேயே விரைந்து ஈடுபடுவான் என்று கொள்ளவேண்டும். "மணல் மலி மூதூர்' என்றது மணலூர் எனக் கூறுவர் சிலர். பாடபேதம் : ஆசிரியர் பெயர் விளக்குடி சொகிரனர் எனவும் கூறப்படும். விளக்குடி என்பது கலங்கரை விளக்கம் அமைந்துள்ள கடற்கரையூர் எனல் பொருந்தும். மேற்கோள் : பண்பிற் பெயர்ப்பினும் (தொல்.பொரு. 103) என்னும் சூத்திர உரையுள் பரிவுற்று மெலியினும் என்றதற்கு இப்பாட்ட்ை எடுத்துக் காட்டி, இது, இரவுக்குறியில் பரிவுற்றது என்று ஆசிரியர் நச்சினர்க்கினியர் கூறுவர். பயன் தலைவன், விரைவிலே மணவினைக்கு முயல்வதே செய்யத்தக்கதென்று துணிவான் என்பதாம். 320. எதனக் கருதினள் அவள் பாடியவர்: கபிலர். திணை : மருதம். துறை : , பரத்தை தனக்குப் பாங்காயினுள் கேட்ப நெருங்கிச் சொல்லியது. சிறப்புற்றேர் : பாரி, ஓரி முதலியோர். ((து.வி.) தலைமகன் ஒருவன் பரத்தமை இயல்பினன். ஒருத்தியோடு உறவு கொண்டு, அவளைக் கைவிட்டு மற்ருெருத்தி மையலில் சென்றனன். இதல்ை முதற்பரத்தை சினங்கொண் டனள். ஒருசமயம் தலைவனை அவ்வழியே செல்லக் கண்டவள் தன் தோழியர்க்கு உரைப்பாள் போல, தலைவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.) ይ•-—ló

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/253&oldid=774259" இலிருந்து மீள்விக்கப்பட்டது