பக்கம்:நற்றிணை-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 268 ހލ போக்கைக் கண்டு, தோழிக்கு வருத்தம் உண்டாகின்றது. அவன் உள்ளத்தை வரைவிலே செலுத்தக் கருதிய அவள், அவன் பிரிவால் தலைவிக்கு நேரும் துயரமிகுதியைக் கூறுவது போல, இவ்வாறு கூறி அவனை உணர வைக்கின்ருள்.) கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன், செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கினம் மீன்குடை நாற்றம் தாங்கல் செல்லாது துய்த்தலை மந்தி தும்மும் நாட! - கினக்கும் உரைத்தல் நானுவல்-இவட்கே 5 நுண்கொடிப் பீரத்து ஊழ்உறு பூஎனப் பசலை ஊரும் அன்னே பல்நாள் அரியமர் வனப்பின்னம் கானம் கண்ண, வண்டெனும் உணரா வாகி, மலரென மரீஇ வருஉம், இவள் கண்ணே. 10 தெளிவுரை : கொழுமையான சுளைகளைக்கொண்ட பலாப்பழங்கள் நிறைந்திருக்கின்ற பலாமரங்களையுடைய மலைச் சாரலிலே, செழுமையாகக் காய்த்துப், பாரம் தாங்காமல் வளைந்து கிடக்கும் கரியதொரு பலா மரக்கிளையிலே, கொக் கானது மீனைக் கொணர்ந்து குத்திக் குடைந்து தின்றிருப்ப தேைல உண்டான நாற்றத்தைப் பொறுக்கமாட்டாதாய், பஞ்சுபோன்ற மயிரையுடைய தலையினைக் கொண்ட மந்தி யானது, தும்மியபடியே இருக்கும் மலை நாட்டோனே! பல நாளும் நீதான் எம்முடைய புனத்தயலே வருதல் உண்டாயினும், வரிகள் பொருந்திய வனப்பினையுடைய கரு வண்டு என்னும் உணர்விழந்தவாய், தம் அழகிழந்து, பழம் பூக்கள் போலக் கலங்கி அழிகழிந்துபோகும் இவள் கண்களும், நுண்ணிய கொடியையுடைய பீர்க்கினது.உதிர்தல் பொருந்திய பழம் பூவோ என்னும்படியாகப் பசலையும் படரா நிற்குமே! ஐயோ! அதனை நினக்குச் சொல்லவும் நாணுவனே யான் இனி யேனும் இந்த நிலை வாராதே காப்பாயாக என்பதாம். கருத்து: இடையீடுபடும் சிறுபிரிவையும் இவள் தாங் காதவள் என்று உணர்ந்து, விரைவில் மணந்து கொள்வாயாக என்பதாம். சொற்பொருள் : கொழுஞ் சுளை - கொழுமையான சுளை. கொழுஞ் சுளைப் பலா என்பது, பலாவின் பல வகையுள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/266&oldid=774273" இலிருந்து மீள்விக்கப்பட்டது