பக்கம்:நற்றிணை-2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:A (& Dextet (آلسده ۵۷ و گاه لاگاساسسی o - G இ' കു அர் நற்றிணை தெளிவுரை 263 சிறந்ததான ஒன்று; இதனைச் செம்பலா என்று போற்றுவர். கவான். மலச் சாரல், செழுங்கோள் - செழுமையான காய்கள் கொண்ட நிலை. ம்ாச்சினை - கரிய கிளை; பெரிய கிளையும் ஆம். குடைநாற்றம் - குடைந்து உண்டதாலே, அவ்விடத்திருந்து எழும் புலால் நாற்றம். துய் - பஞ்சுபோன்ற மயிர். ஊழ் உறுபூ உதிர்தலைப் பெறுகின்ற பழம்பூ அரி - செவ்வரி. அறியமர். வன்ப்பின் கானம்' என்று பாடம் கொண்டு,"அறிதலைப் பொருந்திய அமர்ந்த அழகினைக்கொண்ட கானம்' எனவும் கொள்வர். 'வண்டு - கருவண்டு; உண்டு’ என்றும் பாடம் கொள்வர்: அப்போது, நீதான் கானம் சேர்ந்து அருகிலே உளதானபோதும், அவ்வுண்ர்வை இழந்து, அடுத்து நீ பிரிவதைப் பற்றியே நினைந்து கண்கள் கலங்கும் என்று உரை கொள்க. உள்ளுறை : பலாமரம் திணைப்புனமாகவும், கொக்கு தலைவனுகவும், மீன் தலைவியாகவும், குடைதல் இன்ப நுகர்ச்சி யாகவும், நாற்றம் ஊரலராகவும், மந்தி அன்னையாகவும் கொண்டு உவமையைப் பொருத்தி உள்ளுறை பொருள் காண்க. தினைப்புனத்து வந்து இவளைக் கலந்து போவதாலாகிய நின் செயலை அலரால் அறிந்து அன்னையும் சினத்தோடு பார்ப் பாளாயினள் என்பதாம். விளக்கம் : கொழுஞ்சுளைப் பலாவினை உண்டு களிக்கக் கிளைமீது வந்த மந்தியானது, புலால் நாற்றத்தால் தும்மிக் கொண்டே அகலும் என்பதுபோல, தலைவியை அடைய விரும்பிவரும் தலைவனும், அலருரை ஆரவாரத்தால் அவளே அடையாதே வறிது மீளவும் நேரும் என்றும் சொல்லலாம். பயன் : தலைவன் விரைவிலேயே வரைந்துவந்து தலைவியை மணந்து கொள்வான் என்பதாம். 327. சாகலும் இனிதே தோழி! பாடியவர் : அம்மூவனர். திணை : நெய்தல். துறை : வரையர்து நெடுங்காலம் வந்தொழுக ஆற்ருளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - ((து.வி.) தலைவன் நெடுங்காலம் களவுறவையே நாடி வருதலன்றி, மணவினையிற் கொள்ளக் கருதாத காரணத்தால் - தலைவி வருந்துகின்ருள். அவளைப் பொறுத்திருக்குமாறு கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/267&oldid=774274" இலிருந்து மீள்விக்கப்பட்டது