பக்கம்:நற்றிணை-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 நற்றிணை தெளிவுரை தோழிக்கு, அவள், தன் நிலைமையைச் சொல்லுவதாக அம்ைந்த்து இந்தச் செய்யுள்) நாடல் சான்ருேர் நம்புதல் பழியெனின் பாடில கலுழும் கண்ணுெடு சாஅய்ச் சாதலும் இனிதே-காதலம் தோழி! அங்கில அல்ல ஆயினும், சான்ருேர் கடன்கில குன்றலும் இலர் என்று, உடனமர்ந்து 5 உலகம் கூறுவ துண்டென, நிலைஇய தாயம் ஆகலும் உரித்தே-போதவிழ் புன்னை ஓங்கிய கானல் தண்ணம் துறைவன் சாயல் மார்பே. தெளிவுரை : தோழி! என்பால் அன்பு கொண்டவளே! நம்முடைய உறவினை விரும்பியவராக வந்து. அன்போடு ஒழுகு கின்ற சான்ருேரான நம் தலைவரை நம்பி வாழுதல் பழியைத் தருவது என்ருல், தூங்காதனவாய் அழுதபடியே துன்புறும் கண்ணினேடு, நாளுக்குநாள் உடல் இளைப்புற்றுச் சாவினைப் பெறுதலும் நமக்கு இனி இனிதேயாகும்! அவ்வாறு இறந்து போவதுதான் இயல்புடையதன்று என்ருலும், சால்பினை உடையவர் தாம் செய்யும் கடமையிலே எப்போதும் குறைவு படவே மாட்டார் என்று, சேரப்பொருந்தி உலகம் உரைப்ப தான சொல்லும் உளதாகும் எனக் கொண்டோமாகிய எமக்கு, அரும்புகள் மலர்கின்ற புன்னைமரங்கள் உயரமாக வளர்ந்துள்ள கடற்கானற் சோலையினையுடைய தண்ணிய அழகான துறைவனது மெத்தென்ற மார்பானது, உரிமைப் ப்ொருள் ஆகுதலும் முடிவில் உரியதேயாகும். இரண்டினுள் ஒன்று வாய்ப்பது தவருது என்பதாம். கருத்து : இதனைக் கேட்பவன் பின்னும் காலம் தாழ்க் காதே அவளை வரைந்து மணப்பதற்கு முனைவான் என்பதாம். சொற்பொருள் : நாடல் - விரும்புதல். பழி - பழியுடைய தொரு செயல். பாடுஇல - படுதல் இழந்த உறக்கமிழந்த, சாஅய் - தளர்ந்து சோர்ந்து இளைத்து. கடன்நிலை - கடமை யின் தன்மை. உடனமர்ந்து - ஒன்று சேர்ந்து. தாயம் - உரிமையாக வந்து வாய்க்கும் பொருள். போது - அரும்பு. துறைவன் - கடற்றுறை நாடன். சாயல் - மெத்தென்னும் தன்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/268&oldid=774275" இலிருந்து மீள்விக்கப்பட்டது