பக்கம்:நற்றிணை-2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R عض) كنهمه ...:ه* நறறண தெளிவுரை 265 இறைச்சிப் பொருள் : தன்னை அடைந்தாரைக் கைவிட்டு: மனங்கலங்கி இளைத்துப் போகச் செய்த கொடுமையாளனை யுடைய சோலையாக இருந்தும், புன்னதான், தான் அரும்பு மலர்ந்து மணம் நின்றக்கா நிற்பதும் எதேைலா என்று வியந்த தாம. விளக்கம் : புன்னை போதரும்பி மணம் பரப்பும் காலம் நெய்தல் நிலத்தவர் மணம் வேட்கும் காலமாதலால், அந்தச் சவ்வியைக் கண்டும் தன் கடமை மறந்தானே தலைவன் என்று வெதும்புகின்றனள். தானே உணராதானுக்கு அவை உணர்த்திக் காட்டியும் தெளிவு ஏற்படவில்லையே என்று நினைந்து நொந்ததும் ஆம். - உலகத்தின் உரையானது பொய்க்காது என உறுதி கொள்ளும் நிலையல்லாமல், அவனுடைய போக்கிலே அதற்கான எந்தவொரு குறிப்பும் காணுத அவள், முதலில், சாதலும் இனிதே' என்று கூறினள்; அதனல் எய்துவது யாதும் இல்லாத தால், பின்னர் உலக மொழிப்படி ஒருக்கால் அவனை அடை தலும் வாய்க்கும் என்று நினைந்து ஆறுதல் காண்கின்றனள். 'தாயம் என்பது உரிமைக்கான அடிப்படை: இது தாய் வயிற்றிலிருந்து பிறப்பதனால் வருதலின் 'தாயம் என்றனர். "தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி என்பர் முடத்தாமக் கண்ணியார் (பொருநர் 132). பயன் : தன் வருத்தம் புலப்படப் பிறருக்கு உணர்த்திய தால் சிறிது ஆறுதல் பிறக்கும் என்பதாம். 328. எண் பிழி நெய்! பாடியவர் : தொல் கபிலர். தின குறிஞ்சி. துறை : வரை விடை ஆற்ருளாகிய தலைமகளை வற்புறுத்தது. ((து-வி. :) தலைமகளை வரைந்து வந்து மணந்து கொள்வ தாக உறுதிகூறியவகைத் தலைவன் வரைபொருள் தேடிக் கொணரும் பொருட்டாகப் பிரிந்து போயினன். அவன் வருவ தாகக் குறித்த காலமானது வந்து நாட்களும் கழிந்துபோகத் தொடங்கவே, அவன் குறித்த காலம்வரை ஆற்றியிருந்த தலைவிக்கு மனவேதனை மிகுதியாகி நலிவிக்கின்றது. அதனல், நாளுக்கு நாள் சோர்ந்து தளர்ந்து மெலிகின்ருள். அவள் ந.-17 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/269&oldid=774277" இலிருந்து மீள்விக்கப்பட்டது