பக்கம்:நற்றிணை-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிக்ன தெளிவுரை 2í கூறிச் செலவை நிறுத்துகின்றனன் எனக் கொள்க: அல்லது தோழி கூறக்கேட்டுத் தலைவன் நிறுத்தினன் எனக் கொள்க. ஈங்கை வளைவான முள்ளைக் கொண்டது; அதன் நனைந்த தளிர் மகளிரது மேனி வனப்புக்கு ஒப்பிடப் படுவதை, 'மாரியீங்கை மாத்தளிர் அன்ன. அம்மா மேனி ஆயிழை மகளிர்” எனப் பிற சான்ருேரும் கூறுவர் (அகம். 208): உழுவை தொலைச்சிய வயக்களிற்றைக் கொன்று இழுத்துச் செல்லும் என ஆளியின் பெருவலிமைபற்றிக் கூறப்பட்டது. ஆள்வினை-செயன்முயற்சி. மாந்தளிர் கரிய அழகிய தளிரு மாம்; மாமரத்தினது இளந்தளிருமாம். 'மாமைக்கவின் நின்னெடு போயின்று கொல்’ என்றது, பிரிந்ததன் அத்துணையே அதுதான் பசலையால் உண்ணப். பட்டுப் பாழாகுமே எனத் தலைவியது பேரன்பினைக் காட்டு தற்காம். - இறைச்சிப் பொருள் : களிறு தனக்குப் பகையாகிய உழுவையைக் குத்திக் கொன்றதன் வலிமையைக் கூறினன், தன் மனத்திண்மையை வென்று தன்னைத் தனக்கு ஆட்படுத் திக் கொண்ட தலைவியது மாண்புமிக்க மாமைக்கவினைச் சிறப்பித்தற்கு, அவ் வலிய களிறு ஆளி நன்மாற்ை கொன்று இழுத்துச் செல்லப்பட்டதைக் கூறினன், அத்தகைய அவளது மாமைக் கவினும் பிரிவு நேர்ந்துவிட்டபோது பசலையால் உண்ணப்பட்டு அழிந்து போம் என்பதைச் சிறப்பித்ததற்கு மேற்கோள் : "விழுமம் ஆவன, பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர் வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன் திரியும் என்றலும், பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைவியை ஐய்ந் தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவு மாம் என்று, கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ என்னும் சூத்திரத்து, வேற்று நாட்டகல்வயின் விழுமத் தானும்’ என்பதன் உரைக்கண் கூறுவர் நச்சினர்க்கின்யர். "இஃது இவள் நலன் அழியுமென்று செலவு அழுங்கியது” எனவும் உரைப்ப்ர்-(தொல். பொருள். 185, 146).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/27&oldid=774279" இலிருந்து மீள்விக்கப்பட்டது