பக்கம்:நற்றிணை-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 நற்றிணை தெளிவுரை துயர்கண்டு பொறுக்க, மாட்டாதாளான தோழி, அவளுக்கு, அவன் தவருமல் சொற்படியே வந்து சேர்வான் என்று கூறித் தேற்றுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.) கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேல் தூங்கிச் சிற்சில வித்திப் பற்பல விளைந்து தினகிளி கடியும் பெருங்கல் நாடன் பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம்: அதனல் அதுஇனி வாழி, தோழி!-ஒருங்ாள் 5 சிறுபல் கருவித் தாகி வலனேர்பு பெரும்பெயல் தலைக, புனனே!-இனியே, எண்பிழி கெய்யொடு வெண்கிழி வேண்டாது சார்ந்து தலைக்கொண்ட ஓங்குபெருஞ் சாரல், விலங்குமலை அடுக்கத் தானும் - 10 கலம்பெறு விறலி ஆடும்.இவ் ஊரே. தெளிவுரை : தோழியே கிழங்குகள் வேர்வீழ்த்துக் கீழே இறங்கின. தேன் அடைகள் மரக்கிளைகளின் மேலாகத் தொங்க லாயின. சிற் சிலவான விதைகளை விதைத்த தினைப்பயிரும் பலப்பலவாகக் கிளைத்து, கதிர்கள் விளைந்து முற்றி விட்டன. அதைக் கவர்தற்கு வரும் கிளிகளைக் கடியும் குரலும் எழுந்தது. இத்தகைய பெரிய மலைநாட்டிற்கு உரியவனை நம் தலைவனின் குடிப்பிறப்பானது, நமக்கு ஒப்ப்ாகாத தன்மையினையும் இப் போது நாம் அறிந்து விட்டோம். அதனல், அவனது அந்த உயர்வு தானும் இனி என்றும் வாழ்வதாக! இனிமேல், எள்ளைப் பிழிந்து பெறுகின்ற நெய்யோடு, வெண்மையான பொற்கிழியையும் பெற விரும்பாது போதலைக் கொண்டு, சந்தன மரங்களை உச்சியிலே மிகுதியாகக் கொண்டு, உயர்ந்த இடத்தைக் கொண்டதாக விளங்கும் மலேச்சாரலி னிடத்தே, குறுக்கிட்டுக் கிடக்கும் மலையடுக்குகள் விளங்கும் இடங்களிலே, நன்கலங்களைப் பரிசிலாகப் பெறுதலை விரும்பு கிறவரான விறலியர்கள் கூத்தாட்டு அயர்ந்தபடியே இருப்பர். அத்தகைய களிப்பையுடைய நம் ஊரிடத்தே, ஒரு நாளில், மேகங்கள் சிறிய பலவான மின்னல்களின் தொகுதிகளைக் கொண்டனவாக வலங்கொண்டு எழுந்து, நம் திணைப்புனங் களுள் விடத்தே.பெரிதான பெயலையும் பொழிவதாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/270&oldid=774281" இலிருந்து மீள்விக்கப்பட்டது