பக்கம்:நற்றிணை-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நற்றிணை தெளிவுரை ((து.வி.) தலைமகன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்து சென்றன.கை, தலைவி அவனைப் பிரிந்திருக்க இயலாதவளாகி வாடி நலிகின்ருள். அவளைத் தேற்றுதல் கருதித் தோழி கூறுவ தாக அமைந்த செய்யுள் இது.) - வரையா நயவினர் கிரையம் பேணுர், கொன்ருற்றுத் துறந்த மாக்களின் அடுபிணன் இடுமுடை மருங்கில் தொடுமிடம் பெருஅது புனிற்றுகிரை கதித்த பொறிய முதுபாறு இறகுபுடைத் திற்ற பறைப்புன் தூவி 5 செங்கணச் செறித்த வன்கண் ஆடவர் ஆடுகொள் நெஞ்சமோடு அதர்பார்த்து அல்கும், அத்தம் இறந்தனர் ஆயினும் கத்துறந்து அல்கலர் வாழி தோழி!-உதுக்காண் 10. இருவிசும்பு அதிர மின்னி கருவி மாமழை கடல்முகங் தனவே. தெளிவுரை : தோழி! வாழ்வாயாக! எல்லையில்லாத நன்மைகளை உடையவராய், நிரையத்தைச் சேர்க்கின்ற தீ நெறிகளுள் எதனையும் பேணுதவராய் விளங்குபவர் நம் காதலர் ஆவார். அவர்-கொன்று வழிப்பக்கத்தே போட்டுச் செல்லப் பட்ட மக்களுடைய செத்தபிணங்களின் முடைநாற்றத்தினலே அருகே சென்று கொத்தித் தின்னுதற்கேற்ற வ்ர்ய்ப்பைப் பெருதாய் ஈன்ற அணிமையால், வரிசைப்ாகத் தோன்றும் புள்ளிகளையுடைய முது பருந்தானது, இறகினை அடித்தடித்து வருந்தும். அப்படி அது இறகடிக்கும்போது உதிர்ந்து பறந்து கிடக்கும் புல்லிய இறகுகளைத் தம் சிவந்த கணையிலே செறித் துத் திரிபவர் மறத்தன்மையுடையவரான ஆடவர்கள். அவர்கள் வெற்றிகொள்ளும் கருத்தோடு வழியையே பார்த்த படியாக மறைந்திருக்கும் காட்டுவழியிலே சென்றனராயினும், நம் தலைவர், நம்மைக் கைவிட்டு அங்குத் தங்கிவிடுவார் அல்லர். உவ்விடத்தே பாராய்! பெரிய ஆகாயமெல்லாம் அதிரும்படியாக இடித்து மின்னலின் தொகுதியைக் கொண்ட கார் மேகமானது, கடல் நீரை முகந்து வந்துள்ளன. ஆதலின் அவர் இப்போதே வந்து விடுவார்காண் என்பதாம். கருத்து : கடல் முகந்து மேகம் நம்மூர்ப் பக்கத்து வான்மேல் வந்து இடித்து மின்னி நமக்குமழைவளம் தருதலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/272&oldid=774286" இலிருந்து மீள்விக்கப்பட்டது