பக்கம்:நற்றிணை-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 275 தெளிவுரை : இகுளேயாகிய என் தோழியே! நீரிலேயே இறங்கி நின்று குவளைமலரினைக் கொய்பவர்கள், நீர் வேட்கை யாலே வருந்திஞ்ற்போல், நாள்தோறும் காதலனுடனே தழுவு தலைப் பெற்றும், நின் தோள்கள், தம்முடைய பழைய பூரிப் பிழந்தவாய்த் தொடிகள் கழன்று வீழ்கின்றபடி மெலிந்தனவே' என்று, பலவான் மாட்சிமைப்ப்டச் சொல்லுதலை நீயும் மேற் கொண்டுள்ளன. துருகல்லினை அடுத்த ம்ல்ைப்பிளவினுள்ளே குட்டிகளை யீன்ற பெண் புலியின் பசியைப் போக்குதலை வேண்டி, கரிய நிறத்தையுடைய வலிமையுள்ள ஆண் புலி யானது இரையினை விரும்பிப் பதுங்கியிருக்கின்ற, மலையின் தொடக்கத்தேயுள்ள சிறிதான வழியிலே, அதனைப் பாராட் டாதவனுய், என்னைக் கண்டு கூடிய தலைநாள் போன்ற விருப்பம் கொண்டவனய், பலநாளும் கடத்தற்கு அரிய இருள்வேளை யிலே வருதலைக் காணுகின்ற என்க்கு, விளங்கும் அணிகள் செறிப்புடன் விளங்குதல்தான் எவ்வாறு இயலுமோ? கருத்து: அவன் இரவிலே வருகின்ற வழியினது தன்மை என்னைப் பெரிதும் வருத்துதலால் யான் மெலிவேன் என்பதாம். சொற்பொருள் : இகுளை - இளம் பருவத்தினள். குறுநர் : , கொய்பவர். தொன்னிலை - பழைய தன்மை. தொடி - தோள் வளை. விடர் முகை - துறுகல் அடுத்த மலைப் பிள்ப்பிடம். பிணவு - பெண்புலி. இருங்கேழ் - கரிய நிறம்; இருங் கோள்' எனக்கொண்டு, கொள்ளுதலில் பெரிதும் வன்மையுடைய புலி எனவும் உரைப்பர். பரிக்கும் - பதுங்கியிருக்கும். காண் பேற்கு - காண்பாளாகிய எனக்கு. - . இறைச்சி : பெண்புலியின் பசியைத் தீர்ப்பதற்கு, ஆண் புலி இரை தேடிப் பதுங்கி இருக்கின்றதான பாசத்தின் செவ் வியைக் கண்டோனகியும், என்னுடைய மனக்கவலையை உணர்ந்து, அது தீர்தற்கு, என்னை மணந்து கொள்ளும் முயற்சி யிலே மனஞ் செலுத்துகின்ருன் இல்லையே என மனம் நொந்து கூறியதாம். - விளக்கம் : குவளை குறுநர் நீர் வேட்டாங்கு' என்றது, காதலின்பத்தை நுகர்ந்தும் மீண்டும் மீண்டும் நுகர்தலையே நாடும் மனப்போக்கை விளக்குவதாகவும் கொள்ளக்கூடும். இனி, விடர் முகை ஈன்பிணவு பற்றிக் குறித்தது, தானும் மனையறம் பேணிப் புதல்வனைப் பெற்றுத் தந்திட, அவன் தன்னையும் தன் புதல்வனையும் பேணிக் காத்திட வாழ்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/279&oldid=774302" இலிருந்து மீள்விக்கப்பட்டது