பக்கம்:நற்றிணை-2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 நற்றிணை தெளிவுரை - தேமாய் நாம் நினைக்கும்பொழுதெல்லாம், நல்ல சொல்லைச் சொல்லியபடியிருக்கும். ஆதலினலே மேகம் தன் தொழிலிலே வெறுப்புற்று பெரிய வானத் திடத்தே சென்று போனதாலே வெப்பம் மிகுதியாகிப் போக அதேைல மூங்கில்கள் வாடிப்போய் அழகழிந்து கிடக்கும் மலைவழியின் சிறிதான நெறியினிடத்தே, பருக்கைக் கற்கள் மிகுந்துள்ள பள்ளத்திலே ஊறுகின்ற சிறிதளவான நீரினிடத் திலே, பொலிவுபெற்ற நெற்றியையுடைய யானையோடு புலி யானது போரிட்டு வென்று அந்நீரை உண்ணும்; அத்தகைய சுரநெறிகளைக் கடந்துசென்று ஈட்டும் போருள் தமக்கு அருமை யானது என்று நினையாராய், வலிமையழிந்து உள்ளே பொரு ளாசையே மிகுந்துவிட்ட நெஞ்சத்தோடு, தாம் வள்ளன்மை உடையரெனப் புகழ்பெறுதலை அடைதல் வேண்டி, அரியதான பொருளைத் தேடிவரக் கருதிச் ச்ென்றவர் நின் காதலர்! ஆவர்தாம், நின்னைத் தழுவுதலை எதிர்பார்த்து வந்து, நின் திருந்திய அணிகளையுடைய பணத்த தோளையும் இன்று வந்து. பெறுவர் போலும்! அதனல், பெண்ணே நின் துய்ரம் எல்லாம் இப்போதே நீங்குவதாகுக. கருத்து: "பல்லி அவர் வருவார்ெனச் சொல்வதால், நின் மனக் கவலை தீர்க' என்பதாம். - சொற்பொருள் : மழை - மேகம். மா வி சும் பு - பெரு வானம்; கரிய வானமும் ஆம். உகத்தல் - உயரப் போதல். கழை - மூங்கில். பரல் - பருக்கைக் கற்கள். அவல் - பள்ளம். உரன் அழிந்து - உறுதி கெட்டு: உறுதி கெட்டு என்றது தலைவி யைப் பிரியாது வாழ்தல் என்னும் மனவுறுதியை இழந்து என்றதாம். ஓங்கு மிசை - உயர்ந்த இடம்; சுவரில் உயரமான இடத்தில். நியவரு - நயத்தல் வருதலையுடைய விரும்பப் படுகின்ற. படுதல் - ஒலித்தல். - இறைச்சி : பள்ளத்திலே ஊறிக் கிடக்கும் சிறிதளவான நீரையும், புலி யானையோடு போரிட்டாயினும் உண்ணும் என்றது, அவ்வாறே தலைவனும் தான் விரும்பிய பொருளை எதிர்க்கும் பகையெலாம் வென்றேனும் ஈட்டிக் கொணர்வன் என்பதாம். - விளக்கம்: இதல்ை, தலைவன், பகை முடித்து வருதலைக் கருதி, வேந்து வினையாக, வேற்று நாடு சென்றவன் என்பதும் பொருந்தும். உயர்புகழ் நல்லில்' என்றது. தலைவியின் குடும்பப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/281&oldid=774308" இலிருந்து மீள்விக்கப்பட்டது