பக்கம்:நற்றிணை-2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗 უზ )زمرہ ، لدہ عا أنا 278 நற்றிணை தெளிவுரை பெருமிதத்தைக் கூறியதாகும். 'பல்லி படுமே-நீங்குக அவலம்' என்றதல்ை, பல்லி நல்ல பக்கம் சொல்ல, நினைத்தது நடக்கும் என்பது அந்நாளினும் மக்கள் நம்பிக்கையாயிருந்ததென்பது பெறப்படும். தானம் சென்ருேர் புனநலம் வாட்டுநர் அல்லர்: மன்ைவயிற் பல்லியும் பாங்கொத்து இசைத்தன எனக் கலியுள் ளும் (கலி.11) இம்மரபு எடுத்துக் காட்டப்படும். - பயன் : தலைமகளை ஆறுதல் கூறி அமைதிப்படுத்துதலால், அவளும் ஆறுதலுற்றவளாக அமைதி பேணுவாள் என்பதாம். .6 تمام تکی ک ニーやっrs കി. 334. இன்னுயிர் நிலையே! பாடியவர்: ஐயூர் முடவர்ை. திண : குறிஞ்சி. துறை : தோழி இரவுக்குறிமுகம் புக்கது. ((து:-வி.) முகம்புக்கது என்பது முகத்தோற்றத்தாலேயே தான் சொல்லக் கருதி வந்ததொன்றினை, உரியவர் உணர்ந்து கொள்ளச் செய்வதாகும். தலைமகன் இரவுக்குறி வேண்டினன் என்னும் செய்தியைத் தலைமகளுக்கு அறிவித்து இசைவிக்க வந்த தோழி, அதனைச் சொல்லால் இவ்வாறு கூறி, தன் முகக் குறிகளால் புரியவைக்கின்றனள்.) * கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை பெருவரை அடுக்கத்து அருவி ஆடி, ஓங்குகழை ஊசல் தூங்கி, வேங்கை வெற்பணி நறுவி கற்சுனை உறைப்ப; கலையொடு திளைக்கும் வரையக நாடன் 5 மாரி கின்ற ஆரிருள் நடுநாள், அருவி அடுக்கத்து ஒருவேல் ஏந்தி, மின்னுவசி விளக்கத்து வரும் எனின், என்னே-தோழி! நம் இன்னுயிர் கிலையே! தெளிவுரை: தோழி! கரியவான விரல்களையுடைய மந்திக் கூட்டத்தின் சிவந்த முகங்களையுடைய பெரியவொ ரு கூட்டி மானது, பெரிய மலைப்பக்கத்துள்ள அருவியிலே நீராட, உயர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின் நுனியைப் பற்றி ஊசலும் ஆடி, மனக்கே அழகுசெய்திருக்கும் வேங்கைமரத்தின் நறுமலர்கள் கல்லிடையேயுள்ள சுனே நீரிலே உதிர்ந்து வீழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/282&oldid=774310" இலிருந்து மீள்விக்கப்பட்டது