பக்கம்:நற்றிணை-2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை. - 279 படியாகத்தம் கடுவன்களோடு களித்திருக்கின்ற மலையகநாடன் நம் தலைவன். அவன்தான், தன் கையிலே ஒப்பற்ற வேலினை ஏந்தியவகை, மாரிக்கால மழையானது_நிலைத்துள்ள மிக்க இருளையுன்டய இரவின் நடுச்சாம் வேளையிலே, மின்னலானது இருளைப் பிளக்க எழுகின்ற வெளிச்சமே வழியறியும் விளக்க ம்ாகக் கொண்டு, அருவிகளையுடைய மலைப்பக்கத்தைக் கடந்து, நம்மைக் காணுதற் பொருட்டாகவும் வருவான் என்ருல், தோழி! நம் இன்னுயிர் எவ்வாறு நிலைத்திருக்குமோ, அறி கின்றிலேனே! கருத்து: அவன் வரும் வழியின் ஏதத்தை நினைத்து நினைத்துத் துடித்து வருந்துவேன் என்பதாம். - சொற்பொருள் : கருவிரல் - கரியவிரல். மந்தி - குரங்கின் பெண். ஊசல் தூங்கி - ஊசல் ஆடி. வெற்பணி வேங்கை நறுவி" என்று கூட்டிப் பொருள் காண்க. கலை - குரங்கின் ஆண். திளைக்கும் - காதற் களியாட்டயர்ந்து இன்புறும். ஆர் இருள் - மிகுதியான இருள். நடுநாள் - இரவின் நடுச்சாமவேள்ை. ஒரு வேல் - ஒப்பற்ற வேல்; ஒற்றை வேலெனினும் ப்ொருந்தும். வசி - பிளக்கும். விளக்கம்.ஒளியாகிய விளக்கம். உள்ளுறை : மந்தி அருவியாடி, ஊசல் தூங்கி, வேங்கை வி கற்சுனை உறைப்பக் கலையொடு திளைக்கும் என்றது, அவ்வாறே நீயும் ப க ற் போ தி ல் ஆயத்தாருட்னே அருவியாடிக் களித்தும், ஊசலில் அமர்ந்து இனிதர்டியும், வேங்ைகப் பூக் கொய்து விளையாடியும் மகிழ்ந்தனைய்ர்ய், இரவிலே நின் காமவேட்கை முற்றத் தீருமாறு நம் வீட்டை யடுத்த வேங்கை மரத்து நீழலிலே அவனுடன் இன்புற்று மகிழ் வாயாக என்பதாம். விளக்கம் : என்னே நம் இன்னுயிர் நிலையே! என்னும் சொற்கள், இரவில் அவன் வருதலைத் தாம் ஏற்கவில்லை என்று கூறினபோதும், உட்பொருள் செய்தி அறிவித்தலும், அதனைக் கேட்கும் தலைவி, முகக்குறிப்ப்ால் இசைவு தெரிவித்தலும் நிகழ்க்சியாகக் கொள்க. பேச்சிலே உள்ளத்தை மறைத்துப் பேசி, உரியவர் மட்டும் புரிந்துகொள்ளச் செய்யும் ஆற்றலும் இதற்ை பெறப்படும். வேங்கை நறுவி கற்சுனையில் வீழ்ந்தது வேங்கை மரக் கிளையிலே கலையும் மந்தியும் கூடிக் களித்த களியாட்டத்தால் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/283&oldid=774312" இலிருந்து மீள்விக்கப்பட்டது