பக்கம்:நற்றிணை-2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ممساهوته οινο M)6 ۱ ده ه «یه حکیら తీగా ఉట. நற்றிணை தெளிவுரை وم (ك 230 பயன் : இதல்ை, தலைவியும் தோழியின் குறிப்புச் செய்தி களை உணர்ந்தாளாய், ஆயத்தினின்றும் நீங்கிச் சென்று, தலைவனுடன் கூடியின்புற்றுத் தன் ஆர்வம் தணிவாள் என்பதாம். - - - - 335. என்புற நரலும்! பாடியவர் : வெள்ளிவீதியார். திணை : நெய்தல். துறை : காம மிக்க கழிபடர் கிளவி மீதுார்ந்து, தலைமகள் சொல்லியது. ({து . வி.) தலைவன்மீது பெருகிப் படர்ந்த காமநினை விேைல நெஞ்சழிந்த தலைமகள், நள்ளிரவுப் போதிலும் கண் மூடாதவளாக நினைந்து நினைந்து சோர்கின்றவள், தனக்குத் தானே கூறிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.) திங்களும் திகழ்வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் பொங்குதிரைப் புணரியும் பாடு ஒவாதே; ஒலி சிறந்து ஒதமும் பெயரும்: மலிபுனற் பல்பூங் கானல் முள்இலத் தாழை சோறுசொலி குடையின் கூம்புமுகை அவிழ, 5 வளிபரந்து ஊட்டும் விளிவுஇல் நாற்றமொடு மையிரும் பணமிசைப் பைதல உயவும் அன்றிலும் என்புற நரலும்; அன்றி விரல்கவர்ந்து உழந்த கவர்வின் கல்யாழ் யாமம் உய்யாமை கின்றது 10. காமம் பெரிதே களஞரோ இலரே! தெளிவுரை :- திங்களும் வானத்திடத்தே தோன்றி அழகினைப் பொழிகின்றது; ஒலிக்கும் நீரோடு பொங்குகின்ற அலைகளையுடைய கடலும் தன் ஒலியை விடாதே ஒலித்தபடி யுள்ளது; ஒலியிலே மிகுந்ததாகிக் கடல்நீரும் கரையை மோதி மோதி மீண்டு செல்லும், புனல்வளம் மலிந்த பலவான பூக்களை யுடைய கடற்கரைச் சோலேயினிடத்தே யுள்ள, முள்ளுள்ள இலைகள்கொண்ட தாழையும், சோற்றைச் சொரிகின்ற குடையைப்பேரல நடுப்புருத்தும் முனை கூம்பியும் விளங்கிய அரும்பு, அவிழ்ந்து மலர்ந்துள்ளது: காற்ருனது அத் தாழை மல்ரின் நறுமணத்தை எங்கனும் கொண்டு கெடுதல் இல்லாத நறுமணத்தோடே நிறைக்கின்றது; கரிய பெரிய பனையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/284&oldid=774314" இலிருந்து மீள்விக்கப்பட்டது