பக்கம்:நற்றிணை-2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்நினை தெளிவுரை e8t மேலிருந்து துன்புற்றதாய் ஒலிக்கும் அன்றிலின் குரலும் என் பக்கத்தே வந்து ஒலித்தபடி இருக்கும்; அன்றியும் விரலாலே தடவி வருந்தி இசைகூட்டிய விருப்பந்தரும் நல்ல யாழும், இரவின் நடுயாமப் பொழுதிலே யான் உயிர் வைத்து வாழாத படி சோக இசையை எழுப்புகின்றது; யான் கொண்ட காம நோயோ பெரிதாயிரா நின்றது; அதனைப் போக்கவல்லவரான காதலரோ என்னருகே இரலாயினர்? இனி, யான் எவ்வாறு உய்வேனே? கருத்து : யான் இனிச் சாவதுதான் நேரும்போலும்’ என்பதாம். • சொற்பொருள் : திகழ்தல் - விளங்கல். இமிழ்தல் - ஒலித் தல். புணரி - கடல். பாடு- ஒலித்தல். ஒதம் - கடல் நீர்; கரையிலே மோதிச் சிதறும் அலை நீர். கூம்பு - குவிந்துள்ள. முகை - அரும்பு. விளிவு இல் - கெடுதல் இல்லாத. மை இரும் . கரிய பெரிய. பைதல் - துன்புற்றதாக, என்புற - என் பக்கத்தே யான் இருக்கும் இல்லின் அருகே. உழந்த - வருந்திய். உய்யாமை உயிர்தரியாமை. களைஞர் - களைவாரான காதலர். விளக்கம் : காதலனைப் பிரிந்து விட்ட மகளிர், இரவிலும் துயில் பெருதே கிடந்து வருந்தியிருப்பர் என்பது இயல்பு; ஊர் ஒலியடங்கிய அந்த நள்ளிரவிலே, தலைவியின் தனிமை யைச் சூழ்நிலைகளின் தன்மையும் சேர்ந்து பெரிதும் வருத்த, அவள் புலம்புகின்றதாக அமைந்தது இச் செய்யுள். வானிலே எழுந்து நிலவைப் பொழியும் திங்கள்; ஒலிக்கும் கடல்; மோதிப் பெயரும் அலையோசை எல்லாம் அவள் காது களில் வந்து மோதியடியே இருக்கின்றன. இதழவிழ்ந்த தாழ்ை யின் நறுமணத்தைக் காற்று எங்கும் பரப்பி மய்க்குகின்றது. துணைபிரிந்த அன்றிலின் சோகக்குரலும் அவள் மனத்தின் துயரை மிகுவிக்கின்றது. அவள் விரலால் தடவி மீட்டி வீணை இசையிலாவது ஆறுதல் பெறுவதற்கு முயன்ருல், அதிலிருந்தும் அவளைக் கொல்வதுபோன்ற சோகமான இசையே எழுகின்றது. அவளின் துயரமோ பெரிதாகின்றது! களைஞரோ இலர்! ந்ல்ல சோகப் பட்ப்பிடிப்பு இச்செய்யுள்! தாழை முகைக்குச் சோறு பொதி குடையையும், அது இதழ் அவிழ்தலுக்குச் சோறு சொரிதலையும் சொன்னதும் மிகச் றந்த உவமையாகும். குடையோர் அன்ன கோள் அமை எருத்திற் பாளை (அகம், 335) என இவ்வுவமையைக் கமுகம் பாளைக்குத் தருவர் பிறர். ந.-18 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/285&oldid=774316" இலிருந்து மீள்விக்கப்பட்டது