பக்கம்:நற்றிணை-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை' که همه ما امواجه حثیر و g و பயன் : உள்ளத்தெழுந்து வருத்தும் பெருந்துயர நினைவலைகள், வாய்விட்டுப்புலம்பும்போது, சிறிது தணிவதால் அவள் அமைதியைச் சிறிது காணலும் கூடும் என்பதாம். 336. குடிமுறை பகுக்கும் நாட! பாடியவர் : கபிலர். திணை : குறிஞ்சி. துறை : ஆறு பார்த்துற்றுச் சொல்லியது. - ((து-வி.) இரவுக் குறியை விரும்பி வருகின்றன் தலைவன். அவன் மனத்தை, மண்வினையை விரைந்து செய்தற்கு முயலுவதிற் செலுத்த விரும்புகிருள் தோழி. ஆகவே, இரவில்ே அவன் வரும் வழியினது கொடுமைக்கு அஞ்சியதுபோல்க் கூறி, இரவில் வருவதை மறுத்து உரைக்கின்ருள். இந்தக் கூற்ருக அமைந்த செய்யுள் இது.) - பிணர்ச்சுவற் பன்றி தோன்முலைப் பினவொடு கணக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், கல்லதர் அரும்புழை அல்கிக் கானவன் வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை புனையிருங் கதுப்பின் மனயோள் கெண்டி, 5 குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட! உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும் இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் ஈரளைப் புற்றங் காரென முற்றி இரைதேர் எண்கினம் அகழும் 10 வரைசேர் சிறுநெறி வாரா தீமே. தெளிவுரை : சிலிர்த்திருக்கும் மயிர்மிகுந்த பிடரினையுடைய ஆண் பன்றியானது, தோலாக வற்றித் தொங்கும் முலையை யுடைய தன் பெண்பன்றியோடும் சென்று, திரண்ட தண்டினை யுடைய தினையின் கதிரை அளவுக்கதிகமாகக் கவர்ந்து தின்ற்து. அதனலே கானவன், கற்கள் நிரம்பிய மலையிடத்திலுள்ள கடத்தற்கரிய புழையிடத்தே பதுங்கியிருந்து, வில்லிஞ்ல் அம் பெய்து அந்தச் சிறிய ஆண்பன்றியைக் கொன்ருன் கொன் றவன், அதனைத் தன் மனைவியிடம் கொண்டு தந்தான். அலங் கரித்த கருமையான கூந்தலையுடையவளான அவன் மனைவி யானவள், அப் பன்றியை அறுத்து, தசையை அவ்விடத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/286&oldid=774318" இலிருந்து மீள்விக்கப்பட்டது