பக்கம்:நற்றிணை-2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لها عام لا لاي وچ م للا ایام تشیتی Ö ら t ۵ 8 گلر 4 را) راه لیام پن در( 284 وکی بدو /ہی ہسپاہ நற்றிணை தெளிவுரை இத்துடன் உறுபுலி பார்க்கும் களிறும் உடைத்தாதலால், இரவில் தனியே வழி வருவார்க்குத் தீங்கு நேருமென அஞ்சுதல் இயல்பே என்பதும் தெளிவாகும். பயன் : இரவின் வழி ஏதத்துக்கு அஞ்சுவதுபற்றிக் கூறு தலால், இனி இரவுக்குறியும் வாயாது என்பதை உணரும் தலைவன் தலைவியை வர்ைந்து வந்து மணந்துகொண்டு பிரியா இன்பம் நுகர்தலிலேயே மனம் செலுத்துவான் என்பதாம். 337. சிறந்தார் மறந்தாரோ? பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை : பாலை. துறை : 1. தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிய லுற்ருனது குறிப்பறிந்து விலக்கியது; 2. தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதுTஉம் ஆம். ((து-வி.) 1. பொருள் தேடிவரப் பிரிந்து போவதற்குத் தலைவன் திட்டமிடுவதைக் குறிப்பால் அறிந்து, தோழி, அறநெறி கூறிப் போகாது தடுத்து நிறுத்தியது; 2. தலைவன் பிரிந்து செல்வது உலகியல் அறத்தோடுபொருந்துவதே. ஆயின் அடைந்தாரைக் காப்பதும் வேண்டும் என்று தலைவனிடம் கூறித் தோழி உலகியல் உணர்த்தியதும் ஆம்.) உலகம் படைத்த கால-தலைவ! மறந்தனர் கொல்லோ சிறந்தி சினேரே! முதிரா வேனில் எதிரிய அதிரல் பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர், நறுமோ ரோடமொடு உடனெறிந்து அடைச்சிய 5 செப்பிடந்து அன்ன நாற்றம் தொக்குஉடன், அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பால் தளர்நறுங் கதுப்பில் பையென முழங்கும் அரும்பெறற் பெரும்பயம் கொள்ளாது, பிரிந்துறை மரபின் பொருள்படைத் தோரே. 10 தெளிவுரை தலைவனே! முற்ருத இளவேனிற் காலத்தினை எதிர்நோக்கிய காட்டு மல்லிகை மலரையும், பருத்த அடியை யுடைய பாதிரியின் நுண்மயிர் கொண்ட சிறந்த மலரையும், நறுமணம் கமழும் செங்கருங்காலியின் மலரோடு ஒன்ருகச் சேர்த்து அடைத்து வைத்துள்ள செப்பினைத் திறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/288&oldid=774322" இலிருந்து மீள்விக்கப்பட்டது